Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அசோக் செல்வன் பற்றி கேள்வி… பதிலடி கொடுத்த பிரகதி

அசோக் செல்வன் பற்றி கேள்வி… பதிலடி கொடுத்த பிரகதி

1 minutes read

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் பாடகி பிரகதி. இவர் பாலாவின் ’பரதேசி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடியிருக்கிறார். இவர் சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் அசோக் செல்வனை பிரகதி காதலித்து வருவதாக செய்திகள் பரவியது. இது வதந்தி என்று பிரகதி கூறினார். கல்லூரியில் படித்து கொண்டு இருப்பதாகவும் திருமணம் குறித்த எந்தவித நினைப்பும் தனக்கு இல்லை என்றும் யாரையும் காதலிக்கவில்லை என்றும் கூறினார். இந்த நிலையில் பிரகதியிடம், ‘அசோக் செல்வன் எப்படி இருக்கிறார்? என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கு பதிலளித்த பிரகதி ’அவரைத்தான் கேட்கணும்’ என்று கூறியுள்ளார். பிரகதியின் இந்த பதிலுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More