செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

0 minutes read

தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான அர்ஜுன் தாஸ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் , அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பவர் ஹவுஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்ததுடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.