இங்கிலாந்தின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸை ( Ben Wallace) தேடப்படும் நபர்களின் பட்டியலில் ரஷ்யா சேர்த்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு முன்பிருந்து 2023 ஓகஸ்ட் வரை வாலஸ் இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றினார்.
அவர் பணியில் இருந்தபோது உக்ரைனுக்கு அதிகளவிலான இராணுவ உதவிக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். அத்துடன், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பையும் கண்டித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஒக்டோபரில், கிரிமியா குறித்து வாலஸ் தெரிவித்த கருத்துகளுக்காக, அவரை சர்வதேச தேடப்படும் நபர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஒரு பிராந்திய ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ரஷ்யா தற்போது அவரை தேடப்படும் நபர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது.