மருதாணி பயன்படுத்தும் பெண்களா நீங்கள். சிலருக்கு மருதாணி வைத்தால் சளி பிடிக்கும் அது போல பிரச்சனை உள்ளவர்கள் மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம். கைகளில் மருதாணி வைக்கும் பலர் காலில் மருதாணி வைப்பதில்லை காலில் மருதாணி வைப்பதன் மூலம் சொறி சிரங்கு சேத்துப் புண் பித்த வெடிப்பு ஆகியவை தீரும்.
உடல் சூட்டை தனித்து கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.
நகத்தில் உள்ள கண்ணுக்கு தெரியாத நச்சுக்கிருமிகளை அழிக்கவல்லது
தோல் சம்மந்தப்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
மருதாணியை எலுமிச்சை சாறுடன் கலந்து பூசி வர கால் வெடிப்பற்று போகும்.கேசத்தை மென்மையாக்குவதில் மருதாணி நன்கு செயல்படுகிறது.
சிறிய குறிப்பு : மருதாணியை தயிருடன் கலந்து எலுமிச்சை சாற்றை சேர்க்கவும் இந்த கலவையை 8 மணி நேரம் உறவைத்துபின் உங்கள் தலை முடியில் சேர்க்கவும் 2 மணி நேரம் உலர விட்டு பின் தலையை அலசவும்.