இன்னிசை கவிதை

மீளாக் கனவொன்றில் மூழ்கி
எல்லையற்ற பயணத்தைத் தொடங்கிவிட்ட
நாடோடியென
நகர்கிறதொரு உயிர்ப்பு
அது பறக்கும் வானத்தில்
தனக்கே தனக்காக ஞானியாக மாறி போதனை செய்யும்
சிலநேரங்களில் அழும்
ஒரு சில முறை அபூர்வமாக சிரித்ததை சிலர் கண்டதும் உண்டு
இத்தனை சிரத்தையுடன் அது ஜீவித்திருக்க காரணம் ஏதேனும் இருக்கும் தானே!?
எத்தனை காதலோ!
எத்தனை தோல்வியோ!
எத்தனை ஏமாற்றமோ!
எத்தனை வலியோ!
ஆனாலும் கூட அதற்கென சுழல்கிறதொரு பூமி…!
நானே எனதாய் என்னுள் இல்லை.

இன்னிசை

ஆசிரியர்