March 24, 2023 2:57 am

சாதி | பா.உதயன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஏன் நாற்றம் தாங்க முடியாமலா
தூர விலகிப் போகிறீர்
உயர் சாதி உங்கள் மலத்தை தான்
நாங்கள் கீழ் சாதி அள்ளிக்கொண்டிருக்கிறோம்

கவனமாக பார்த்து போங்கள்
உங்கள் மலக் குளியலை
தாண்டிப் போபவர்கள்
உங்கள் வெள்ளை வேட்டியில்
ஊத்தை ஒட்டிக் கொள்ளாமல்

காந்தியின் சத்திய சோதனையின்
இன்னும் ஒரு பக்கத்தில்
எழுதி வையுங்கள்
எங்கள் மலத்தை உண்ணக் கொடுதோம்
என்னைப் போலவே
மூக்கும் முழியுமாய்
பிறந்த இன்னும் ஒரு மனிதனுக்கு என்றே

மனங்களில் மலத்தை போல்
மனம் கொண்ட
உயர் சாதி உங்களுக்கு
தான் சொல்லுகிறேன்
சாதி இரண்டொழிய வேறில்லை

நினைவில் வையுங்கள்
காலம் ஒரு நாள்
மாறிப் போகலாம்
அப்போ நாம் உங்களுக்கு
உண்ணச் சோறும் குடிக்கத் தண்ணீரும்
தருவோம்

ஏன் எனில்
உன்னைப் போலவே
என்னையும் ஒரு தாய் தான்
பெத்துப் போட்டவள்.

பா.உதயன் 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்