செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் வேலைவாய்ப்பு மோசடி: நேர்முகத்தேர்வுக்கான செயலியை பதிவிறக்கிய நபரின் £18,000 மாயம்!

வேலைவாய்ப்பு மோசடி: நேர்முகத்தேர்வுக்கான செயலியை பதிவிறக்கிய நபரின் £18,000 மாயம்!

1 minutes read

வேலைவாய்ப்பு இணையத்தளங்களைப் பயன்படுத்தி வேலை தேடுவோரை இலக்கு வைத்து பாரிய நிதி மோசடிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், போலியான நேர்முகத்தேர்வு செயலிகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

LinkedIn தளம் ஊடாக தன்னைத் தொடர்புகொண்ட போலி ஆட்சேர்ப்பாளர் ஒருவரால் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்ட நபர் ஒருவர், வழங்கப்பட்ட ஆவணமொன்றை பதிவிறக்கம் செய்ததன் மூலம் தனது 18,000 பவுண்ஸ் பெறுமதியான சேமிப்பை இழந்துள்ளார்.

வேலைவாய்ப்பு ஆவணம் போன்று தோற்றமளித்த குறித்த கோப்பில் தீங்கிழைக்கும் மென்பொருள் (Malware) இணைக்கப்பட்டிருந்த நிலையில், சில மணித்தியாலங்களுக்குள் பாதிக்கப்பட்ட நபரின் கிரிப்டோகரன்சி கணக்குகளிலிருந்த அனைத்துப் பணமும் திருடப்பட்டுள்ளது.

வேலை சந்தையில் நிலவும் கடுமையான போட்டி காரணமாக இவ்வாறான ஆட்சேர்ப்பு மோசடிகள் அண்மைக்காலமாக தீவிரமடைந்து வருவதாக LinkedIn மற்றும் Indeed தளங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

வேலை வாய்ப்புகளின் பற்றாக்குறை காரணமாக இளைஞர்கள் இத்தகைய ஆபத்து அறிகுறிகளை புறக்கணித்துவிட்டு, மோசடிகளில் சிக்குவதாக LinkedIn தரவுகள் தெரிவிக்கின்றன. நிறுவனங்களின் உண்மைத்தன்மையை முழுமையாக ஆராய்ந்த பின்னரே தொடர்பாடல்களை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் LinkedIn தளத்தில் வேலை தேடுவதாக பதிவிட்டிருந்த நிலையில், அவரைத் தொடர்புகொண்ட போலி நபர் ஒருவர் வீடியோ நேர்முகத்தேர்வை நடத்தியுள்ளார். பின்னர் கூகுள் ஷீட்ஸ் (Google Sheets) ஊடாக தொழில்நுட்ப மதிப்பீட்டுப் பணியொன்றை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அப்பணியை முடித்த சிறிது நேரத்தில் பாதிக்கப்பட்ட நபரின் இணைய பணப்பைகள் முழுமையாக சூறையாடப்பட்டுள்ளன.

இவ்வாறான புதிய வகை இணையத் தாக்குதல்களை இலகுவில் அடையாளம் காண முடியாது என ‘ஹேவ் ஐ பீன் ஸ்குவாட்டட்’ (Have I Been Squatted) இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுக்ஸின் டி பிரிக்சாஜ் தெரிவித்துள்ளார். கூகுள் லொகின் மற்றும் முறையான செயலிகள் போன்ற தோற்றத்திலேயே இவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோன்று இன்டீட் நேர்முகத்தேர்வு செயலி அல்லது MyInterview போன்ற போலி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வைத்து தனிப்பட்ட தரவுகளையும் நிதியையும் திருடும் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளதாக மால்வேர்பைட்ஸ் (Malwarebytes) நிறுவனம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.