Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் 10 நாளில் தொப்பை குறைக்கும்.

10 நாளில் தொப்பை குறைக்கும்.

1 minutes read

இஞ்சி மற்றும் சீரகத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. குறிப்பாக இவற்றின் மருத்துவ தன்மை நமது உடலில் நோய்கள் அண்டாமல் காத்து கொள்கிறது.

சீரக இஞ்சி நீர் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து உடல் எடையை குறைந்து விடும்.

மேலும் தினமும் இந்த நீரை குடித்து வந்தாலே போதும். எளிதில் தொப்பையை குறைத்து விடலாம். இந்த சீரக இஞ்சி நீரை தயாரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

தேவையானவை
இஞ்சி-சிறு துண்டு
சீரகம்-1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு-1/2 ஸ்பூன்
செய்முறை
தேவையான அளவு நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
பின் மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி கொண்டு அதனுடன் இஞ்சியை துருவி அல்லது நசுக்கி போடவும்.
பின்பு இந்த நீரை கொதிக்க விட்டு இறக்கி கொண்டு இந்த நீருடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் உங்கள் தொப்பை குறைந்து விடும்.
சீரக இஞ்சி நீரின் பயன்கள்
புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இந்த நீருக்கு உள்ளது. குறிப்பாக மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவற்றில் இருந்து நம்மை காக்கும்.
உடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புகளையும், கொலஸ்ட்ராலையும் இந்த சீராக இஞ்சி நீர் எளிதில் குறைத்து விடுகிறது.
இஞ்சி சீராக நீரை குடித்து வருபவர்களுக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமாம். மேலும் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடன் இருக்க உதவும்.
கொலெஸ்ட்ராலால் ஏற்படுகின்ற இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஆகியவையும் இந்த நீரால் தடுக்க படுகிறது. எனவே தினமும் காலையில் இந்த நீரை குடித்து வாருங்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More