Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் உட்கொள்ள வேண்டாம் நுகர்ந்தால் போதும்

உட்கொள்ள வேண்டாம் நுகர்ந்தால் போதும்

3 minutes read

உடல் எடை குறைப்பதற்கு பலரும் டயட் மற்றும் உடற்பயிற்சிகள் போன்று பலவித வழிகளை முயற்சி செய்கின்றனர்.

இப்பிரச்சனையை போக்க சில ஒயில்கள் உதவுகிறது, அதுவும் அவற்றை நுகர்ந்து பார்த்தாலே நல்ல பலன் கிடைக்குமாம்.

லெமன் ஒயில்

ஒரு காட்டனில் லெமன் ஒயிலை ஊற்றி நனைத்து அதை சாப்பிடுவதற்கு முன் நுகர்ந்து பார்க்க வேண்டும். அல்லது 1 டம்ளர் நீரில் 2 சொட்டுகள் லெமன் ஆயிலை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

இப்படிச் செய்வதால் அதிகப்படியான உணவு சாப்பிடுவதை தவிர்க்க முடியும். இதனால் உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்தலாம்.

திராட்சை ஒயில்

திராட்சை ஒயிலை தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது 1/2 ஸ்பூன் க்ரேப் ஆயிலுடன் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தொப்பையில் தடவி மசாஜ் செய்து 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

இதனால் நம் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, கொழுப்புகள் எளிதில் கரையும்.

புதினா ஒயில்

சாப்பிடுவதற்கு முன் புதினா ஒயிலை பஞ்சில் நனைத்து நுகர்ந்து பார்க்க வேண்டும். அல்லது புதினா ஆயில் கலந்த நீரை காலை உணவு சாப்பிடுவதற்கு முன் குடிக்கலாம்.

இதனால் நிறைவான பசி உணர்வு ஏற்படும். அதனால் அதிகப்படியான உணவினை எடுத்துக் கொள்ள தோன்றாது.

பட்டை ஒயில்

சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகரிக்கும். அதனை தடுக்க இந்த இலவங்கப்பட்டை ஆயில் உதவுகிறது.

டீ குடிக்கும் போது அதில் 2 சொட்டுகள் பட்டை ஆயிலை கலந்து குடிக்கலாம். 1 கப் சூடான தண்ணீரில் 2 ஸ்பூன் பட்டை ஆயில் மற்றும் 1/2 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடுவதற்கு முன் குடிக்கலாம்.

இஞ்சி ஒயில்

ஒரு கப் சூடான தண்ணீரில் 3 சொட்டுகள் இஞ்சி ஆயிலை கலந்து குடிக்க வேண்டும். அதனால் பசி உணர்வு கட்டுப்படுத்தப்படுவதுடன், செரிமானம் சீராகும்.

ஏலக்காய் ஒயில்

அன்றாடம் சமைக்கும் உணவுகளில் ஏலக்காயில் ஆயிலை 2 சொட்டுக்கள் கலந்து சாப்பிடலாம் அல்லது உணவு சாப்பிடும் முன் இந்த ஆயிலை நுகர்ந்து பார்க்கலாம்.

இதனால் உடல் எடை குறைவதுடன், சிறுநீர் தொற்று தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும்.

மிளகு ஒயில்

மிளகு ஆயிலை உணவில் சேர்த்துக் கொள்வதால், அது உடல் எடையை குறைத்து, பசியை கட்டுப்படுத்தி, அதிகப்படியான உணவு எடுத்துக் கொள்வதை தடுக்கிறது.

வெந்தய ஒயில்

குளிக்கும் நீரில் 5 சொட்டுகள் வெந்தய ஒயிலை கலந்து குளிக்கலாம். அல்லது 3 சொட்டுகள் வெந்தய ஆயிலுடன் 2 சொட்டுகள் தேங்காய் எண்ணெய்யை கலந்து தொப்பையில் தடவி மசாஜ் செய்யலாம்.

இதனால் உடல் கொழுப்பு கரைந்து, உடல் மற்ரும் சருமத்தின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.

ஆரஞ்சு ஒயில்

ஆரஞ்சு ஒயிலை சாப்பிடுவதற்கு முன் நுகர்ந்து பார்க்கலாம். அல்லது சூடான நீரில் ஆரஞ்சு ஆயிலை கலந்து குடிக்கலாம்.

இது நம் மனதை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

ஜாஸ்மின் ஒயில்

சாப்பிடுவதற்கு முன்பாக ஜாஸ்மின் ஒயில் நுகர்ந்து பார்க்கலாம். அல்லது குளிக்கும் நீரில் 4-5 சொட்டுகள் ஜாஸ்மின் ஆயில் கலந்து குளிக்கலாம்.

இதனால் நமக்கு முழுமையான மன அமைதி கிடைப்பதோடு, அதிகமாக உணவு எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படுகிறது.

சந்தன ஒயில்

தேங்காய் பாலுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் 5 சொட்டுகள் சந்தன ஆயிலை கலந்து குடிக்கலாம். அல்லது யூக்கலிப்டஸ் ஆயில், ரோஸ் மெர்ரி ஆயில், டேங்கிரைன் ஆயில் ஆகிய மூன்று ஆயிலையும் பயன்படுத்தலாம்.

இதனால் உடல் எடை அதிகரிக்காமல் எளிதில் குறைக்கலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More