Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் தொப்பை அவதி இனி இல்லை

தொப்பை அவதி இனி இல்லை

1 minutes read

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உடல் எடை அதிகரிப்பதுடன் வயிற்று பகுதியில் அதிகளவு சதை போடுவது தற்போது இயல்பாகி விட்டது.

இதற்கு முக்கிய காரணம் சரியாக உடற்பயிற்சி இல்லாதது. மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை.

வயிற்று பகுதியில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைக்க உடற்பயிற்சிகள் பல பயிற்சிகள் இருந்தாலும் ஹாம்ஸ்ட்ரிங் கிரன்சஸ் பயிற்சி (Hamstring Crunches) என்ற பயிற்சி மிகவும் எளிமையானது.

விரைவில் பலனை தரக்கூடியது. மேலும் வீட்டில் தினமும் 20 நிமிடம் செய்தால் போதுமானது. இந்த பயிற்சி செய்ய தரையில் மல்லாந்து படுத்து, கால் முட்டியை மடித்து, பாதத்தைத் தரையில் பதிக்க வேண்டும்.கைகளை காதுகளோடு ஒட்டியபடி தலைக்கு மேலாகக் கொண்டுசென்று, தரையில் வைக்க வேண்டும்.

இப்போது, தலை, மார்பகப் பகுதியை முன்னோக்கி நகர்த்தி, கைகளை உயர்த்தி, விரல்கள் கால் முட்டியைத் தொடுவது போல் கொண்டு வந்து, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதே போல், ஆரம்பத்தில் 25 முறைகள் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும். அதிகளவு தொப்பை இருப்பவர்கள் இந்த பயிற்சியை செய்ய ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More