தாக்குதலுக்குள்ளான நிலையில் ஊடகவியலாளர் கொழும்பில் சடலமாக மீட்பு!தாக்குதலுக்குள்ளான நிலையில் ஊடகவியலாளர் கொழும்பில் சடலமாக மீட்பு!

melgunasekera_CI

பத்தரமுல்ல, கெமுனு மாவத்தை பகுதியில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏ.எப்.பி செய்தி சேவையின் முன்னாள் பெண் ஊடகவியலாளரான மெல் குணசேகரவே பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் தாக்குதலுக்குள்ளாகி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெற்றோர்கள் தேவாலயத்திற்கு சென்று வீடு திரும்பிய போது மெல் குணசேகர வீட்டில் சடலமாக கிடந்துள்ளதை கண்டுள்ளனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பெற்றோர் பத்தரமுல்லை பொலிஸாருக்கு அறிவித்ததோடு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த ஊடகவியலாளர கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

ஆசிரியர்