கால்பதிக்கும் ரஷ்யா | இலங்கை ரஷ்யாவிற்கு இடையில் அணு அறிவுப் பரிமாற்றம்கால்பதிக்கும் ரஷ்யா | இலங்கை ரஷ்யாவிற்கு இடையில் அணு அறிவுப் பரிமாற்றம்

இலங்கைக்கும், ரஷ்யாவிற்கும்  இடையில் அணுசக்தி தொடர்பான அறிவை பரிமாறிக்கொள்ளும்  செயற்றிட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   இதன்பொருட்டு, ரஷ்யாவின் அணுசக்தி அதிகார சபையின் பிரதிநிதிகள் சிலர் இலங்கைக்கு  வந்துள்ளதாக இலங்கை அணுசக்தி அதிகார சபையின் தலைவர் கலாநிதி ரஞ்ஜித் விஜேவர்த்தன குறிப்பிட்டார்.

இலங்கையில் அணு ஆராய்ச்சி ஆய்வு கூடமொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அணுசக்தி தொடர்பான வளங்களை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அதிகார சபையின் தலைவர், அதற்காக பாடசாலைகளில் அணுசக்தி தொடர்பான பாடவிதானங்களை அதிகரிக்க உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

ஆசிரியர்