நியூயார்க்கில் நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் போது தமிழ் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் குறித்து மிகவும் கவலையடைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி பங்குரா தெரிவித்தார்.
மேலும் இச்சம்பவத்திற்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என இலங்கையின் நிரந்தர பிரதிநிதி கோஹன்னாவுடன் கோரிக்கை விடுத்ததாகவும் பங்குரா கூறினார்.