செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொலையாளி 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!

கொலையாளி 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!

1 minutes read

 

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் 27 ஆண்டுகளாக சிறையில் வடிவருகிறார்கள் இதுதொடர்பாக மத்திய அரசின் அனுமதி கேட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேரும் சிறை தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்து மத்திய அரசின் அனுமதி கேட்டது.

அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு 7 பேரும் 24 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்ய அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடந்த 2016-ம் ஆண்டு மீண்டும் 2 கடிதங்கள் எழுதியது. அதற்கு மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை.

ஜனாதிபதியின் கருத்தையும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கேட்டு இருந்தது. இதற்காக தமிழக அரசு அனுப்பிய 7 குற்றவாளிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. வழக்கு விவரங்களும் அனுப்பி வைக்கப்பட்டது. இதை பரிசீலித்த ஜனாதிபதி 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று கூறி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.