புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் சாவு!

யாழில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் சாவு!

0 minutes read

அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞர் ஒருவர் கிருமித் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில், வைத்திய பரிசோதனையில் இளைஞர் கிருமித் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும், போதைக்கு அடிமையானவர் என்பதையும் வைத்தியர்கள் கண்டறிந்தனர்.

இளைஞருக்கான சிகிச்சையை வழங்கி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை இன்னுமொரு இளைஞரும் போதைக்கு அடிமையான நிலையில், உடலில் கிருமித் தொற்றுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More