September 22, 2023 6:35 am

ரஷ்ய பயணத்தை முடித்து நாடு திரும்பினார் வடகொரிய ஜனாதிபதி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் கடந்த வாரம் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ரஷ்யா சென்றார்.

அவருடன் வடகொரியாவின் ராணுவ உயர் அதிகாரிகளும் சென்றனர். அங்கு சென்றுள்ள அவர் ரஷ்ய ஜனாதிபதி புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ரஷ்யாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். அதன்பிறகு ரஷ்யாவின் ஆயுத தொழிற்சாலைகளுக்கு சென்று, ஆயுதங்களை பார்வையிட்டார்.

இந்தப் பயணத்தில் ஜனாதிபதி புதின், ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் பிற ராணுவ உயர் அதிகாரிகளை கிம் ஜாங் அன் சந்தித்துப் பேசினார்.

விளாடிவோஸ்டாக்கில் உள்ள ராணுவ தளத்துக்கு சென்ற அவர்கள், ரஷ்யாவின் ராணுவ திறன்கள் மற்றும் ஆயுதங்கள் குறித்து கிம் ஜாங் அன்னுக்கு விளக்கம் அளித்தனர்.

ரஷ்யாவின் முக்கிய விண்வெளி தளங்களுக்கும் சென்று அவர் பார்வையிட்டார். மேலும் ரஷியாவுக்கு ஆயுத பரிமாற்ற ஒப்பந்தம், ராணுவத்துக்கு இடையேயான மூலோபாய மற்றும் தந்திரோபாய ஒருங்கிணைப்பு போன்றவை குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

இந்நிலையில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் தனது 6 நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்