Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஆஸ்திரேலியாவில் முதல் முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்தியா!

ஆஸ்திரேலியாவில் முதல் முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்தியா!

1 minutes read

இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் 2-1 என இந்திய அணி முன்னிலை பெற்றது.

இந்நிலையில் 4 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் எடுத்து 193, பண்ட் 159 ரன்கள் எடுத்து அசத்திர்.

ஜடேஜா 81, அகர்வால் 77 ரன்கள் எடுத்தனர். 7 விக்கெட் இளம்பிற்கு 622 ரன்கள் எடுத்த போது, இந்திய ஆணை டிக்ளர் செய்தது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 300 ரங்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனால் பாலோ ஆன் ஆனது. இந்திய அணியின் குல்தீப் யாதவ் 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து 2 வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் கவாஜா 4, ஹாரிஸ் 2 ரன்கள் எடுத்து ஆடி வந்த நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால், ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே 2-1 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளதால், டெஸ்ட் தொடரை வென்றது. ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More