முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

சட்டொக்ராமில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி தமது முதல் இன்னிங்ஸில் 330 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அதனை தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 286 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து, தமது இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து 202 என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஆசிரியர்