செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் கால்பந்தாட்டப் போட்டி

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் கால்பந்தாட்டப் போட்டி

1 minutes read

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி 175 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தின் ஆதரவில் அகில இலங்கை ரீதியில் அழைக்கப்பட்ட புனிதர்கள் ( All Saints) கல்லூரிகளுக்கு  இடையில் நடாத்தும் அணிக்கு 07 பேர் கொண்ட மாபெரும் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (21),   ஞாயிற்றுக் கிழமை (22)    ஆகிய இரு தினங்கள் காலை 08:00 மணி முதல் யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 

இப் போட்டியில்,

#யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி

#இளவாலை சென். ஹென்றிஸ் கல்லூரி

#ஊர்காவற்றுறை சென். அன்ரனிஸ் கல்லூரி

# கொழும்பு சென். பெனடிக்ட் கல்லூரி

# அநுராதபுரம் சென். ஜோசப் கல்லூரி

#மன்னார்- நானாட்டான் டிலாசால் கல்லூரி

#மன்னார் சென். சேவியர் கல்லூரி

#வென்னப்புவ ஜோசவ்வாஸ் கல்லூரி

#யாழ்ப்பாணம் சென். ஜோண்ஸ் கல்லூரி

#வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி

ஆகிய கல்லூரிகளின் அணிகள் பங்குபற்றவுள்ளன.

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த கால்பந்தாட்டப் போட்டிகளின் போது மாணவர்களை உற்சாகப்படுத்த ஆசிரியர்கள், மாணவர்கள்,  பழைய மாணவர்கள், கல்லூரி நலன் விரும்பிகள் மற்றும் கால்பந்தாட்ட ரசிகர்களை கல்லூரிச் சமூகம் அன்புடன் அழைத்து நிற்கின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.