செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பஞ்சாப் கிங்ஸ் 3 விக்கெட்களால் வெற்றிபெற்றது

பஞ்சாப் கிங்ஸ் 3 விக்கெட்களால் வெற்றிபெற்றது

1 minutes read

நியூ சண்டிகார் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (31) இரவு மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிகொண்டது.

இப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 163 ஓட்டங்களை  வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அவுஸ்திரேலிய வீரர் கூப்பர் கொனொலி தனது அறிமுக ஐபிஎல் போட்டியில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் அரைச் சதத்தைக் குவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

மொத்த எண்ணிக்கை 7 ஓட்டங்களாக இருந்தபோது ப்ரியான்ஷ் ஆரியா (7) ஆட்டம் இழந்தார்.

எனினும் ப்ரப்சிம்ரன் சிங்குடன் இரண்டாவது விக்கெட்டில் 40 பந்துகளில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்த கூப்பர் கொனொலி வெற்றிக்கான அடித்தளத்தை இட்டுக்கொடுத்தார்.

ப்ரப்சிம்ரன் சிங் 37 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

எவ்வாறாயினும் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்கள் வீழ்ந்ததால் பஞ்சாப் கிங்ஸ் பெரும் தடுமாற்றம் அடைந்தது. (118 – 6 விக்.)

ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிந்தபோதிலும் கூப்பர் கொனொலி 44 பந்துகளில் 5 பவுண்டறிகள். 5 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 72 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

அணித் தலைவர் ஷ்ரேயஸ் ஐயர் 18 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ப்ராசித் கிரிஷ்ணா 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

அதிரடிக்கு பெயர் பெற்ற ஐந்து வீரர்கள் அணியில் இடம்பெற்ற போதிலும் அவர்களில் ஒருவராலும் 40 ஓட்டங்களை எட்ட முடியாமல் போனது.

அணித் தலைவர் ஷுப்மான் கில் 39 ஓட்டங்களையும் ஜொஸ் பட்லர் 38 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றதுடன் இருவரும் 2ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அதுவே இந்தப் போட்டியில் அணியின் சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

அவர்களை விட க்லென் பிலிப்ஸ் 25 ஓட்டங்களையும் வொஷிங்டன் சுந்தர் 18 ஓட்டங்களையும் சாய் சுதர்சன் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

ராஹுல் தேவாட்டியா 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் விஜயகுமார் விஷாக் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் யுஸ்வேந்த்ர சஹால் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: கூப்பர் கொனொலி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.