செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? | பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று இரவு பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? | பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று இரவு பலப்பரீட்சை

2 minutes read

இண்டியன் பிறீமியர் லீக் 19ஆவது அத்தியாயத்தில் சம்பியன் பட்டத்தை சூடப் போவது யார்  என்பதைத் தீர்மானிக்கும் நடப்பு சம்பியன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் முன்னாள் சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையிலான மாபெரும் இறுதிப் போட்டி அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு நடைபெறவுள்ளது.

றோயல் செலஞ்சர்ஸ் அணி ஐந்தாவது (2009, 2011, 2016, 2025, 2026) தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. அத்துடன் சம்பியன் பட்டத்தை தக்க வைக்க கடுமையாக முயற்சிக்கவுள்ளது.

ஐபிஎல் இல் அறிமுகமான 2022இல் சம்பியனான குஜராத் டைட்டன்ஸ் 2023இல் உப சம்பியனானது. இப்போது 3ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் தரம்சாலாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது தகுதிகாண் போட்டியில் மோதிக்கொண்டபோது 92 ஓட்டங்களால் வெற்றிபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இதன் காரணமாக இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று சம்பியானவதற்கு அனுகூலமான அணியாக றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு கருதப்படுகிறது.

எனினும் நியூ சண்டிகாரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இரண்டாவது தகுதிகாண் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸின் இறுதி ஆட்டக் கனவுக்கும் வைபவ் சூரியவன்ஷியின் அதிரடி துடுப்பாட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த குஜராத் டைட்டன்ஸ் தனது கோட்டையான அஹமதாபாத் விளையாட்டரங்கில் அசத்தும் எனவும் கருதப்படுகிறது.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்களால் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்று இன்றைய இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட 8 சந்தர்ப்பங்களில் தலா 4 வெற்றிகளை ஈட்டடியுள்ளன.

கவனிக்கத்தக்க வீரர்கள்

பெங்களூரு அணியில் விராத் கோஹ்லி (ஒரு சதம் உட்பட 600 ஓட்டங்கள்), அணித் தலைவர் ரஜாத் பட்டிதார் (486), தேவ்டத் படிக்கல் (463) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் புவ்ணேஷ்வர் குமார் (26 விக்கெட்கள்), ராசிக் சலாம் (16), ஜொஷ் ஹேஸ்ல்வூட் (13) ஆகியோர் பந்துவீச்சிலும் க்ருணல் பாண்டியா (225 ஓட்டங்கள். 13 விக்கெட்கள்) சகலதுறையிலும் பிரகாசித்துள்ளனர்.

குஜராத் அணியில் ஷுப்மான் கில் (ஒரு சதம் உட்பட 722 ஓட்டங்கள்), சாய் சுதர்சன் (ஒரு சதம் உட்பட 710), ஜொஸ் பட்லர் (507) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் கெகிசோ ரபடா (28 விக்கெட்கள்), ராஷித் கான் (19), மொஹம்மத் சிராஜ் (18), ஜேசன் ஹோல்டர் (17), ப்ராசித் கிரிஷ்ணா (16) ஆகியோர் பந்துவீச்சிலும் அசத்தி உள்ளனர்.

இந்த இரண்டு அணிகளினதும் வீரர்களின் ஆற்றல்களை ஒப்பிடுகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி சற்று பலம்வாய்ந்ததாக தென்படுகிறது.

எனினும் இறுதிப் போட்டி என்று வந்துவிட்டால் இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் விளையாடும் என்பதால் இன்றைய இறுதிப் போட்டி அஹமதாபாத் அரங்கில் திரண்டிருக்கும் ரசிகர்களை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள இரண்டு அணிகளினது இரசிகர்களையும் பரபரப்பின் உச்சத்திற்கு இட்டுச் செல்லும் என்பது நிச்சயம்.

அணிகள் (பெரும்பாலும்)

றொயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு: வெங்கடேஷ் ஐயர், விராத் கோஹ்லி, ரஜாத் பட்டிதார் (தலைவர்), தேவ்டத் படிக்கல், டிம் டேவிட், க்ருணல் பாண்டியா, ஜித்தேஷ் ஷர்மா, புவ்ணேஷ்வர் குமார், ஜொஷ் ஹேஸ்ல்வூட், ராசிக் சலாம், ஜேக்ப் டபி அல்லது சுயாஷ் ஷர்மா.

குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்மன், ஷுப்மான் கில் (தலைவர்), ஜொஸ் பட்லர், நிஷாந்த் சிந்து, வொஷிங்டன் சுந்தர், ராகுல் தேவாட்டியா, ஜேசன் ஹோல்டர், ராஷித் கான், கெகிசோ ரபடா, மொஹம்மத் சிராஜ், ப்ராசித் கிரிஷ்ணா.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.