தமிழர்களின் வரலாற்றில் முதல் தொன்மைக்காலமாக விளங்கும் சங்ககாலத்தில் நிறைவுபெற்ற சமுதாயமாக தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை தனது ஒவ்வொரு பதிவின் வழியாகவும் உறுதிப்படுத்தி வரும் ஜெயஶ்ரீ சதானந்தனின் இந்த ஆய்வுத் தொடரில், இப்பதிவு இம்முறை உழைக்கும் மகளீரின் வராலாற்றுச் சிறப்பு மிக்க பங்களிப்புப் பற்றி ஆராய்கிறது.
-ஆசிரியர்
சங்ககாலப் பெண்கள் பிற்காலத்தைப் போல அரண்மனைக்குள்ளும், இல்லத்திற்குள்ளும் தமது நடமாட்டத்தை குறைத்துக் கொள்ளவில்லை. குறுக்கிக் கொள்ளவில்லை. தினைப்புலத்திலும், கடற்கரையிலும், காட்டிலும், மலையிலும், பாலை நிலத்திலும் பெண்கள் தாராளமாக நடமாடினார்கள். வேலை செய்தார்கள். வெறுமனே காதல் கிழத்தியராக இவர்கள் சித்தரிக்கப்படவில்லை. உழைப்போராகவும், உற்பத்தியில் பங்கெடுத்தவர்களாகவும், புலவர்களாகவும், பாடினிகளாகவும் இருந்திருக்கின்றார்கள் என்பதை எமக்கு சங்க இலக்கியங்கள் சான்று காட்டி நிற்கின்றன. அந்த வகையில் சில சங்க இலக்கியச் சான்றுகளோடு உழைக்கும் மகளிரான சங்க இலக்கியப் பெண்களை நாம் உற்று நோக்கலாம்.
புறநானூறு 61
களை எடுக்கும் உழத்தியர்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் எனும் பெயர் கொண்ட புலவர்
“கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர்” என்ற பாடலைப் பாடுகின்றார். அதாவது சோழன் சென்னியின் சோழநாடு மருத வளத்தால் மிகுந்தது. கொண்டை முடித்து அதிலே தழையும் செருகியவராக உழத்தியர், பயிர்களிடத்தில் வளர்ந்த ஆம்பல்களையும், நெய்தல் செடிகளையும் களைந்து ஒதுக்குவார்கள் என இந்தப் பாடலில் வருகின்றது.
புறநானூறு 326
பருத்திப் பெண்டின் சிறு தீ
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் எனும் புலவர் பாடுவதாவது,
இரவு வேளையில் கூட பருத்தி நூற்கும் பெண்கள் பஞ்சில் கலந்திருக்கும் சிறையும் செற்றையும் புடைப்பதற்குச் சிறு அகல் விளக்கினை ஏற்றிக்கொண்டு தம் வேலையைச் செய்வதாக வருகின்றது.
அகநானூறு 245
கள் விற்கும் பெண்டிர்
மதுரை மருதன் இளநாகனார் என்ற புலவர் தனது பாட்டில் கூறுவதாவது,
இருள் வந்த போதிலும் வரிகள் விளங்கும் பணைத்த தோள்களையும் அழகிய தேமல் கள் விளங்கும் வயிற்றினை உடைய கள் விற்கும் மகளிர் இருக்கும் இடங்களுக்கு சென்று ஆடவர்கள் கள் அருந்துவதாக வருகின்றது.
அகநானூறு 98
குறி சொல்லும் கட்டுவிச்சிப் பெண்கள்
முதுமை வாய்ந்தவரும் குறி சொல்வதில் வல்லவருமாகிய கட்டுவிச்சியரான பெண்கள், பல பகுதியாக கூடையிலே அரிசியை முருகனுக்கு பரப்பி வைத்து, இது முருகனது செயலில் வந்த வருத்தம் என்று தலைவிக்கு வந்திருக்கும் காதல் நோயால் அவள் மெலிந்து போய்விட்டதை அவர்கள் குறி பார்த்து சொல்வதாக இந்தப் பாடலின் கருத்து அமைகின்றது.
குறுந்தொகை 298
குறி சொல்லும் அகவன் மகளிர்
பல பாடல்கள் பாடியவர் என்ற பெருமைக்குள்ளான பரணர், தனது குறுந்தொகைப் பாடலில் கூறுகின்றார்,
யானையைப் பரிசாகப் பெற அகவன் மகளிர் அதாவது குறி சொல்பவள் அகுதை (வேளிர் குடி)
இடம் வந்து பாடுவாள். குறி சொல்லுவாள். ஆனால் அவள் தனக்கு யானையைப் பரிசாக கொடுக்க வேண்டும் என்று வாய்விட்டு கூற மாட்டாள் என இந்த பாடலில் வருகின்றது.
நற்றிணை 95
களைக்கூத்தாடும் பெண்கள்
பெண் ஒருத்தி மூங்கில் கம்புகளிடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து வித்தை காட்டுகின்றாள். இதை “களைக்கூத்து” என்று அழைக்கப்படும். அந்த கழைக்கூத்து அவள் ஆடும் போது பார்த்துக் கொண்டிருக்கும் குற மகள் ஒருத்தியின் மீது காதல் கொண்ட தலைவன் தன் பாங்கனிடம் அவளைப் பற்றி கூறுவதாவது, ஆடு மகள், வளைத்து திரித்த வலிமையான கயிற்றின் மீது நடப்பாள். அப்போது அந்த கயிறு கட்டிய மூங்கில் படுத்து நிமிர்ந்து வருந்தும் என இந்த பாடல் வரிகள் சுட்டி நிற்கின்றன.
நற்றிணை 22
தினைப் புனம் காக்கும் கொடிச்சி
“கொடிச்சி காக்கும் அடுக்கள் பைந்திணை” என வரும் பாடலை பெயர் அறியப்படாத புலவர் பாடியிருக்கிறார். அதாவது தினைக்கதிர் நன்றாக விளைந்திருக்கின்றது. கொடிச்சி (குறிஞ்சி நிலப் பெண்) தினைப்புனம் காத்துக் கொண்டிருக்கின்றாள். ஆண் குரங்கு ஒன்று தினைக்கதிரை கிள்ளிக்கொண்டு பாறை உச்சிக்குச் சென்று மழையில் குச்சி ஒன்றை பிடித்துக் கொண்டு மரத்தில் அமர்ந்திருப்பதாக இந்த பாடல் வரிகள் அமைந்திருக்கின்றன.
நற்றிணை 306
கிளியோட்டும் குறிஞ்சி நிலப் பெண்
தந்தை விதைத்த தினை விளைந்து விட்டது. மகள் கொடைச்சி மகள் குளிர் கருவியை அதாவது கிளி ஓட்டும் கருவியானது மிகவும் ஒலியெழுப்பவல்லது அதை வைத்துக்கொண்டு கிளி ஓட்டும் நிலை இனி இல்லை கொடிச்சி இனிமேல் இல்லம் செல்லலாம் என்று கூறிவிட்டு கானவர் தினைக்கதிர்களை அறுவடை செய்யத் தொடங்கினர் என இந்த பாடல் வரிகள் வருகின்றன.
அகநானூறு 126
மீன் விற்கும் பாண் மகள்
உரோடோகத்துக் கந்தரத்தனார் என்ற புலவர் பாடிய இப்பாடலின் கருத்தானது,
பரதவப் பொண் ஒருத்தி தனது வாளை மீன்களை நெய்தல் நிலத்தில் விற்றுக் கொண்டிருக்கின்றாள். ஒரு குடியானவன் மருத நிலத்திலிருந்து வந்து தனது நெல்லுக்கு பண்ட மாற்றாக வாளை மீன்களைத் தரச் சொல்லி கேட்கின்றான். அவள் முடியாது எனக் கூறிவிட்டு கள்ளுக்கடைகள் இருக்கும் தெருக்களுக்கு துணிந்து செல்கின்றாள். அங்கு புத்திசாலித்தனமாகப் பேசி முத்துக்களையும், அணிகலன்களையும் பண்ட மாற்றாகப் பெற்றுக்கொண்டு தனது வாளை மீன்களைக் கொடுக்கின்றாள் என இந்த பாடலில் வருகின்றது.
இது போலவே இன்னும் பல சங்க இலக்கியங்களில் தயிர் விற்கும் ஆயர் பெண்கள், உப்பு விற்ற உமணர் பெண்கள் என சில பாடல்களிலும், தூண்டில் போட்டு விரால் மீன் பிடிக்கும் பாண் மகள் என பெரும்பாணாற்றுப் படையிலும் குறிப்புகள் அமைந்துள்ளன.
ஆனால் வருந்தத் தக்க வகையில், சங்க காலத்துக்கு அடுத்து ஆரியர் வருகையும் வட இலக்கியங்களும், “பதிவிரதை தர்மங்கள்” என்ற புனைவுகளும், இதிகாசங்களும் பெண்களின் ஆளுமைகளைப் பின் நாட்களில் நலிவடையச் செய்து விட்டன, நசுக்கி விட்டன என்றே கூறலாம்.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 45 | சங்ககாலத்தில் காதல் என்னும் அறம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 44 | சங்க காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 43 | சங்க காலத்தில் தாலி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 42 | தீப் பிழம்பு போன்ற செங்காந்தள் பூ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 41 | புலி தங்கிய வயிறு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 40 | உணர்வுகளை மறைக்காத தலைவியர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 39 | வழிபடவும் வாழ்த்தவும் விளங்கி நின்ற நெல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-38 | சங்க காலத்தில் பறை எனும் பழம் பெரும் இசை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்