Thursday, May 9, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்

6 minutes read

 

வடக்கிருத்தல் என்பது நமது மூதாதையர் வழக்கத்தில் இருந்திருக்கின்றது. போரில் தோல்வியுற்று ஓடும் போது புற முதுகிலே படைக் கருவிகள் தாக்கிப் புண் ஏற்படும் பட்சத்தில், அதை அவமானமாக வீரர்கள் கருதுவர். அவ்வேளையில் அந்த வீரர்கள் வடக்குத் திசை நோக்கி அமர்ந்து உண்ணா விரதம் இருந்து தமது உயிரைப் போக்குவர். சிலவேளை அம்பு மார்பில் பட்டு முதுகு வரை சென்றாலும் கூட அதை அவமானமாகக் கருதி வடக்கிருந்து உயிர் விடுவர். அத்தோடு இந்த உலக வாழ்வைத் துறக்க விரும்புவோரும் வடக்கிருந்து உயிர் விடுவர். சங்க இலக்கியங்கள் பல வடக்கிருந்து உயிர் நீத்தோரின் வரலாறுகளைக் காட்டி நிற்பதை இங்கு நாம் உற்று நோக்கலாம்.

புறநானூறு 66

இதில் வெண்ணிக் குயத்தியார் என்னும் சோழர் நிலப் பெண் புலவர் மிகப்பெரும் போர்க்களமான வெண்ணிப் பறந்தலை பற்றி பாடுகின்றார் .
“நனியிரு முன்னீர் நாவாய் ஒட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக”
என ஆரம்பிக்கும் பாடலில் மதயானை மிகுந்த படை வன்மை உடைய கரிகால் சோழனே! பகைவரினும் மேற் சென்று அவர் எதிர் நின்று, அவரைக் கொன்றொழித்த வெற்றி வீரனே! வெண்ணி எனும் ஊர்ப் புறத்தில் நடந்த போரில் மார்பில் அம்பு பட்டு அது முதுகு வரை சென்றதால் அது புறப்புண் என நாணினான் சேர மன்னன். அதனால் வெண்ணிப் பறந்தலைப் போர்க் களத்திலேயே வடக்குத் திசை நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தான். வடக்கிருந்து உயர்துறந்த அவன் புறத்தே அம்பு செல்லுமாறு ஏவிப் போர் முறை பிறழ்ந்த நின்னைக் காட்டிலும் நல்லவன் சேர மன்னனே! எனப் பாடுகின்றார். இது கேட்ட கரிகாலன் தனது பிழையை உணர்ந்து வெற்றிவாகை சூட வில்லை. வெற்றி விழாக் காணவில்லை எனப் பாடல்கள் சுட்டுகின்றன.

புறநானூறு 216
அவனுக்கு இடம் செய்க!
“யாண்டு பலவாக நரையில வாகுதல் யாங்காகியர்”
நட்பின் இலக்கணம் காட்டும் கோப்பெரும் சோழன் எனும் மாபெரும் மன்னன் தானே நின்று இப்பாடலைப் பாடுகின்றார்.
அதாவது தனது சொந்தப் பிள்ளைகளே தவறிழைத்ததால் வடக்கிருக்க எண்ணினார் கோப் பெருஞ் சோழன். ஆதலால் தனது நண்பன் பிசிராந்தியாருக்கும் தன்னருகே இடன் ஒழிக்க! என்று கூறிப் பாடிய செய்யுள் இது.
எனது நண்பன் பிசிராந்தையார் என்னுடன் வடக்கிருக்க வருவார். அவருக்கு இடம் ஒதுக்கங்கள் என்கிறார் . என்னைப் பற்றி அவரும், அவரைப் பற்றி நானும், கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர ஒருவரை ஒருவர் நாம் நேரில் கண்டதில்லை. இவ்வாறு பல ஆண்டுகள் கடந்து போயின. என்றாலும் எங்களுடைய குற்றமற்ற உள்ளத்தோடு பழகிய உரிமை நட்பு உண்டு. இருந்தாலும் பிசிராந்தையார் இங்கு வருவாரா? வடக்கிருப்பாரா? என்ற ஐயம் வேண்டாம். நிறைந்த அறிவாளிகளே! அவன் இகழத் தக்கவன் அல்ல. இனியவன். இருவரும் நட்பால் கட்டுண்டு கிடக்கின்றோம். நான் வடக்கே இருக்கும் துன்பத்தில் இருக்கும் போது அவன் அங்கே நிற்க மாட்டான். உடனே ஓடி வருவான் பிசிராந்தியாருக்கும் எனக்கருகே இடம் ஒதுக்கி வையுங்கள். என இந்தப் பாடலைப் பாடி கோப்பெரும் சோழன் வடக்கிருக்கின்றார்.

அதன் பின்னர் கோப்பெரும் சோழன் வடக்கு நோக்கி உண்ணா நோன்பு இருந்து இறந்து விடுகிறார். பிசிராந்தையார் அவரைக் காண வரும் போது, கோப்பெருஞ்சோழன் உயிர் நீத்து விட்டார். அதை அறிந்து பிசிராந்தையார் வருந்தி அவருக்கு இடம் ஒதுக்கிய இடத்திலேயே வடக்கிருந்து உயிர் நீத்தார் என்பது வரலாறு.

முதுமக்கள் தாழி

எமது மூதாதையர், வடக்கிருந்து உயிர் நீத்தோரை முதுமக்கள் தாழி எனப்படும் பெரிய பானையில், அதாவது அன்னையின் கருவறைக்குள் இருக்கும் சிசு போல அவர்களின் உடலை வைத்து அவர்களுக்கு பிடித்த பொருட்களையும் அதற்குள் வைத்து மண்ணில் புதைத்திருக்கின்றனர். இதற்குச் சான்றாக அகழ்வாராட்சியில் கீழடி போன்ற இடங்களில் முதுமக்கள் தாழிகளை கண்டெடுத்துள்ளனர்.

இந்த வேளையில், இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சமயம் உறுதியுடன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகத்தின் மறு உருவம் எமது திலீபன் அண்ணா, நம் அனைவரினது நினைவிலும் நின்று காட்சி தருகின்றார்.

இந்திய அரசிடம் தனது கோரிக்கைகளை முன்வைத்து வடக்கிருந்து ( வடக்குத் திசை நோக்கி) உயிர் நீத்தார்.
2000 வருடங்களுக்கு முதல் “வடக்கிருந்த” வரலாறு அல்ல.
எம் கண் முன்னே, வெறும் 36 வருடங்களுக்கு முன் “வடக்கிருந்த” எம் தேசத்தின் சொத்து தியாக தீபம் திலீபன் அண்ணா எம் இனம் வாழும் வரை எம்முள் வாழ்வார்.

ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் |  ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்

சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More