September 27, 2023 1:17 pm

அங்கம் – 12 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 12 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

1964867_10202814721061823_446334263_n

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….

முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..

– வணக்கம்LONDON –

 

பல சவால்கள் மத்தியில் வைத்தியசேவை வழங்கிக் கொண்டிருக்கையில் புதியதோர் அனுபவம் ஏற்ப்பட்டது.

13ம் திகதி மார்கழி 2008 அன்று முகமாலை பகுதியில் இராணுவ வீரர் R.A.Nissan Ranasinghe காயமடைந்த போது விடுதலை புலிகளால் சிறை பிடிக்கப்பட்டார். அவர் 21ந் திகதி மார்கழி 2008 எமது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டார். பொதுமக்களும் சில விடுதலை புலி உறுப்பினர்களும் போரின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருந்த பகுதியில் Nissanனும் அனுமாதிக்கப்பட்டார். Nissan இன் முகம் பயத்தால் நடுநடுங்கியது.

தீவிர சிகிச்சைப் பிரிவின் முன்பகுதியில் உள்ள கதிரையில் அமர்ந்திருந்த Nissanஐப் பரிசோதித்த வைத்தியர் இடது தோல் மூட்டு பகுதியில் துவக்குச் சுட்டுக் காயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததை அவதானித்தார். தீவிர சிகிச்சசை பகுதியில் உள்ள கட்டிலில் தங்கவைக்கப்பட்ட Nissan இற்கு அன்று இரவு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Nissan இன் அருகில் சென்று எந்தவூரில் இருந்து வந்துள்ளீர்கள் எனக் கேட்டன். அவர் தனது கதையை சோகத்தோடும் பதட்டத்தோடும் கூறிமுடித்தார். உடனடியாக அவரது அம்மாவிற்கும் அக்காவிற்கும் Nissan வைதியசளையில் அனுமதிகப்பட்டிருப்பதை தொலைபேசி ஊடக அறிவித்தேன். Nissan இன் பதட்டம் நீங்கவில்லை. பொதுமக்கள் பலர்’ Nissan ஜ பார்வையிட வந்தனர். இதனால் Nissan ற்க்கு மேலும் பதட்டம். ஒரு சில நாட்களில் Nissan னிடம் பலரும் கதை கேட்பதை நாங்கள் அனுமதிகவில்லை.

தினசரி Nissan இன் அம்மாவிற்கு மகன் சுகமாக இருக்கின்றார். சமாதனம் ஏற்பாடுகின்ற போது வீடு வந்து சேருவார் என அறுதல் கூறினேன். “ நாங்கள் மகனுக்கு போதி பூஜை செய்கினறோம் இதை மகனிடம் கூறிவிடவும்” என Nissan அம்மா கூறினார். தொலைபேசியில் அம்மாவிற்கும் அக்காவிற்கும் ஆறுதல் கூறுவதோடு பின்னர் Nissan அம்மாவிடம் பேசியவற்றை Nissan க்கும் கூறி ஆறுதல்படுத்தினேன்.

இவ்வாறு ஒரு சில நாட்களில் வைத்தியசாலையில் கடமை’ புரிந்தவர்களோடு Nissan இற்கு ஓரளவு பரீட்சயம் ஏற்பட்டது. Nissan தனக்கு தேவையானவற்றை கேட்டு பெற்றுக்கொண்டார். இவ் வேளையில் ஓமந்தையூடான பாதை வழியாக ஆங்கில, தமிழ் பத்திரிகைகள் எங்கள் தேவைக்காக வாங்குகின்ற போது Nissan க்காகவும் லங்காதீப பத்திரிகை தருவித்துக் கொடுத்தோம்.

சில நாள்களின் பின்னர் “Sir என்னால் சிவப்பரிசிச் சோற்றைச் சாப்பிடமுடியாமல் உள்ளது எனக்கு வெள்ளை அரிசி சோறு தரமுடியுமா” என Nissan கேட்டார்.
அப்போது இருந்த வசதியில் அதனைச் செய்தாலும் பின்னாளில் எங்களுக்குத் தயாரிக்கப்படுகின்ற சாப்பாட்டையே Nissan னும் உண்டார்.

இவ்வாறான நாட்களில் பாகுபாடு இல்லாமலும் மனநிலை பாதிகாமலும் இருக்க அவரை நாம் பண்பாக நடத்தினோம். காயப்பட்டு தினசரி போராளிகளும் பொதுமக்களும் வருகையில் அவார்களை கூட Nissan உடன் மனிதநேயத்தோடு நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வோம்.

இவ்வாறான போரின் போதன மக்களது இடப்பெயர்வில் இடம்பெயர்ந்து செல்லுகையில் தர்மபுரம், கல்லாறு புன்னைநீராவி ஆகிய இடம்பெயர்ந்த வைத்தியசலைகளுக்கு அவரை அழைத்து சென்றோம்
கடுமையானசூழ்நிலையிலும் (situation) மிகவும் பாதிக்கப்பட்டவரை (Vulnerable) காப்பற்ற வேண்டியது மனித நேய பண்பாகும்.

இப்படியாக எம்மால் காப்பற்றப்பட்ட Nissan பின்னாளில் விடுதலை புலிகளால் அழைத்து செல்லப்பட்டலும் இறுதி யுத்தத்தின் பின்னர் இவரது குடும்பத்துடன் மீள இணைந்தது எங்களுக்கு மிகபெரிய சந்தோசம்.

 

 

தொடரும்……….

 

 

dr.sathy_   வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து

 

 

முன்னைய அங்கங்கள்…….

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/

http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்