December 7, 2023 1:12 am

அறிவியல் திறன் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 12அறிவியல் திறன் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 12

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அவர்களின் அறிவியற் திறனுக்கான மேலும் ஒரு உதாரணம் கூசா முறை. வெப்பத்தினால் மண் கூசாவிலுள்ள நீர் வெளியே கசிய உள்ளே இருக்கும் நீர் குளிர்மையாக இருக்கும் . இன்று கூட இராக்கில் பொது இடங்களில் களிமண்ணால் வனையப்பட்ட பெரிய பானைகள் சுமேரியரின் பானைகள் என்று தாகத்தைத் தணிக்க உதவுவதைக் காணலாம்.

A4

சுமேரியர் கட்டடங்களையும் கோவில்களையும் அமைப்பதற்கு வேறு இன மக்கள் சிலரையும் பயன்படுத்தியதாகவும் அவர்களும் சுமேரியர்களும் கலந்ததனால் உருவானவர்களே யூத இனம் என்றும் ஒரு ஆய்வாளர் கூறுகிறார். இது இப்படியிருக்க சுமேரியர்களின் செழிப்பைக் கண்ட பல இனங்கள் அவர்களிடமிருந்து பலவற்றை அறிந்தார்கள். அறிய முயன்றார்கள். முடியாத போது தாக்குதல்களைத் தொடுத்து சுமேரியரை திகில் கொள்ள வைத்தார்கள்.

A5

சுமேரியரிடம் மாடுகளும் கழுதைகளுமே அதிகம் இருந்ததால் அவற்றையே மற்றைய இனங்களின் தாக்குதலில் இருந்து தம்மைப் பாதுகாக்க எதிர்த் தாக்குதலுக்குப் பயன்படுத்தினர். போர் வீரர்கள் பயிற்றுவிக்கப்பட்டு படையணி அமைக்கப்பட்டு தாக்குதல்களை நடத்தினர். தாக்குதளுக்குத் தலைமை வகித்தோர் தலைக் கவசங்களையும் அணிந்திருந்ததாகவும் மன்னர்கள் தலைகளுக்கு தங்கத்தால் ஆன கவசங்கள் அணிந்ததும் காணப்படுகிறது. கோதுமையை உண்டு கொழுத்திருந்த சுமேரியரால் அவர்களை அடிக்கடி எதிர்க்கவும் முடியவில்லை.

A2

சுமேரியர் மென்மையான விலங்குகளுடன் பழக்கப் பட்டவர்கள். மற்றவர்கள் நாடோடிகளாய் அதிக காலம் திரிந்தவர்களாதலால் பலம் கொண்டவர்களாகவும் பல சூட்சுமங்களை அறிந்தவர்களாகவும் இருந்தனர். அத்தோடு குதிரைகளை வைத்திருந்ததோடு அவற்றைத் தாக்குதலுக்கும் பழக்கபடுத்தி இருந்தனர். அவர்களின் பலத்தின் முன்னால் சுமேரியரால் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

 

 

தொடரும் …

 

 

 

Nivetha   நிவேதா உதயராஜன் | வரலாற்று ஆய்வாளர் | லண்டனிலிருந்து

 

 

இத்தொடரின் முன்னைய பகுதிகள்

 

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-introduction/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-histry-1/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-2-2/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-3/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-4/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamil-history-5/

http://www.vanakkamlondon.com/sumerian-history-6/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-7/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-8/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-9/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamil-history-10/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-11/

 

 

(சர்ச்சைக்குரிய விடயம் ஆனால் ஆழமாகப் பார்க்கவேண்டிய வரலாறு. திரு சிவகனேஷன் அவர்களுடைய வழிகாட்டலுடன் திருமதி நிவேதா உதயராஜன் காத்திரமான ஆய்வு ஒன்றைச் செய்துள்ளார். சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்யார் இந்த சுமேரியர்இவர்களுடைய நாகரிக வளர்ச்சி எங்கே ஆரம்பமானதுஇவர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு என்னஅப்படியானால் தமிழர் யாருடைய வழித்தோன்றல்இவற்றுக்கான விடைகளைத் தேடி விரிகின்றது இத்தொடர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்