செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சுவடுகள் 32| நானும் அவளும்…. | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 32| நானும் அவளும்…. | டாக்டர் ரி. கோபிசங்கர்

9 minutes read

அவள்

“ ஏய் கொஞ்சம் சுண்ணாம்பு தாவன், பொயிலைக் காம்பிருக்கே எண்டு தனித்தனியக் கேட்டு முழுசா வெத்திலைப்பையை வாங்கிக் கொண்டு, “ இதைப்பார் ஒரு எட்டு போட்டு வாறன்” எண்டு சொல்லீட்டு வெளிக்கிட்டன். காலமை மூண்டு மணிக்கே எழும்பி வந்தது சாக்கு சாமான் எல்லாம் ஏத்திக் கொண்டு வர நாலு மணி தாண்டீட்டு. வந்து மூட்டை விரிக்க கோயில் மணி நாலரை எண்டு சொல்ல ஆரவாரம் கூடிச்சுது.

வெத்திலையோட வெளிக்கிட்டு வர மூத்திரம் முட்டிக்ககொண்டு வந்தது , போறதுக்கு இடம் தேடினால் ,இடமில்லை. ஆம்பிளைகள் எண்டால் மூலை வழிய எங்கையும் எப்பவும் ஒதுங்கலாம் எங்கடை சீரழிவு எங்களோட தான் . ஒருமாதிரி கோழிக்கடை பின்மூலையில கட்டி இருந்த தட்டி மறைப்புக்க ஒதுங்கீட்டு வந்தா காலில ஓட்டினது கோழிப் பீயா, கோழிச்செட்டையா இல்லை வெட்டிக் கழிச்சு எறிஞ்ச துண்டா எண்டு தெரியாம காலைக்கழுவீட்டு வர கொஞ்சம் வெளிச்சம் வந்திட்டுது.

எவ்வளவு நாள் கேட்டும் மாநகரசபை கக்கூஸ் கட்டித் தருதில்லை, பொம்பிளைகளின்டை பிழைப்பு விளங்கினாத்தானே. இந்தமுறை காசு கேக்க வரேக்க சொல்லோணும் எண்டு யோச்சபடி பிளேன்ரீயைக் குடிச்சிட்டு வெத்திலைப்பையை துறந்தன். சரசக்கா பாவம் எதைக் கேட்டாலும் இல்லை எண்டு சொல்லாது. எல்லா அவசரத்திக்கும் அது தான் உதவி. சந்தையில senior கிட்டத்தட்ட இருவத்தைஞ்சு வருசம் service .

“பதினாறு வயசில ஓடிப்போய் கலியாணம் கட்டி ஒரு வருசத்தில அந்தாள் விட்டிட்டுப் போக பிள்ளைத்தாச்சியாக் கடகம் தூக்கினனான்” எண்டு அடிக்கடி சொல்லுவா. இப்பவும் அவவின்டை வடிவில கன பேருக்கு கண். மஞ்சள் நிறம் கூடின வெள்ளை, பெரிய கொண்டை, வெத்திலைச் சிவப்பு வாய் , ஒரு ரூபாய் அளவு குங்குமம், கழுத்தில ஒரு சங்கிலி எண்டு அம்சமா இருப்பா.

முதல்முதலா சந்தைக்கு வந்து கடகத்தோட இருக்க பாத்தவன் , முறைச்சவன் , சிரிச்சவன் எண்டு எல்லாரையும் ஓடும் செம்பொன்னும் போல் ஒக்கவே நோக்கி ,ஆம்பிளைகள் மட்டும் தான் எண்ட சந்தையில அடிப்படையை மாத்தி தனிச்சு நிண்டு ,நிமிந்து , காசுழைச்சு திருப்பியும் ஒண்டைக் கட்டி இப்ப இன்னும் நாலு பிள்ளை.

“சந்தையில எல்லாப் பொம்பிளையையும் சொர்ணாக்கா எண்டு தான் சொல்லுவினம் , அதைக் கணக்கெடுக்காத , கொஞ்சம் சிரிச்சாலும் அவனவன் தலையில ஏறி இருந்திடுவான் இல்லாட்டியும் வீட்டை போனா சந்தையில ஒரே சிரிப்பும் கனைப்புமாம் எண்டு கதைக்கிறதில கரவு இருக்கும் “ எண்டு சரசக்கா வந்த முதல் நாளே சொல்லீட்டா.

பஸ்ஸில கடகம் ஏத்தேக்க கண்டக்டரோட சண்டை தொடங்கி ,விக்க சந்தைக்குள்ள கொண்டு போற சாக்குக்கு கணக்கு போடிறவனோட முழுச்சாக்கை அரைச்சாக்கெண்டு சண்டை பிடிச்சு உள்ள கொண்டு போய், எல்லாரும் ஒரே விலையெண்டு கதைச்சு சந்தை தொடங்கும். கொஞ்ச நேரத்தில விக்கத்தந்திரமில்லாதவன் மரக்கறி விலையைக்குறைக்க அவனோட சண்டையைத் தொடர்ந்து, வித்து முடிஞ்சு வீட்டை வெளிக்கிட்டு வந்து கொமிசன் வாங்கறவனோட சண்டை பிடிச்சு காசைக்குறைச்சு ,வீட்டை வர பள்ளிக்கூடத்தால வந்துதுகள் சண்டை பிடிக்கத் தொடங்க அதோட சேந்து சண்டையைப் பிடிச்சு, சாராய மணத்தோட வந்தவன் சாப்பாட்டைக் குறை சொல்ல அவனோடேம் சண்டையைப் பிடிச்சிட்டுப் படுக்க நித்திரை மாத்திரம் சண்டை பிடிக்காம வரும்.

உடம்பு வருந்தி வேலைக்குப் போறவை எல்லாரும் வெத்திலைப்பையோடயே தான் திரிவினம் . பலருக்கு ஒரு நேரச் சாப்பாட்டை மறக்கப்பண்ண இந்த வெத்திலை உதவி செய்யும்.

வெத்திலையால வயித்தை நிறப்பீட்டு வந்து இருக்க, வழக்கமா வாற சில்லறைக்கடைக்காரர் எல்லாம் வந்து சாமானை ஏத்தத் தொடங்கிச்சினம். வந்தவன்டை பழைய கணக்கெல்லாம் பாத்து காசைக் கேக்க, “நாளைக்கு எண்டவனுக்கு” சாமானை மாட்டன் எண்டு சொல்லாமல் எப்பிடியும் நாளைக்குத் தா எண்டு சொல்லீட்டு , வீட்டை ஈடு வைச்சவனுக்கு இண்டைக்கெல்லோ காசுத் தவணை சொன்னான், அவனுக்கு என்ன சொல்லிற எண்டு யோசிக்கத் தொடங்கினன். அப்ப முன்னுக்கு வந்து எங்க சாமான் வாங்குவம் எண்டு யோச்சபடி நிண்ட சின்னப் பெடியினை இந்தா என்ன வேணும் , கொண்டா பையை எண்டு அங்கால போக விடாமப் பையை வாங்கினன்.

நான்……

சந்தையில சாமான் விக்கிற பொம்பிளைகள் எல்லாரும் வயசு வித்தியாசம் இல்லாமல் ஆச்சி மார் தான் எங்களுக்கு . “ சாமான் வாங்கப் போனா ஆச்சிமாரிட்டை கவனமா இருக்கோணும் , அங்க நிறைய சொர்ணாக்காக்கள் இருப்பினம் பாத்தோன்னயே நாங்கள் சந்தைக்கு புதுசு எண்டு எழுதி ஒட்டி இருக்கிறது அவைக்குத் தான் தெரியும் . தப்பித் தவறிக் கிட்டப்போனா சரி , என்ன ஏது எண்டு கேக்காமல், உந்தப் பையைத்தா எண்டு பறிச்சு வாங்கீடுவினம். பையைக் குடுத்தா பொல்லைக் குடுத்து அடி வாங்கின மாதிரித்தான் “ எண்டு ஒரு அனுபவஸ்தன் சொன்னது எனக்கும் நடந்திச்சிது.

என்னென்ன எப்பிடி வாங்கிற எண்டு அம்மா சொன்ன theory க்கு practical செய்வம் எண்டு கையை வைக்கச் ,”சரி, நீ உடைச்சிட்டு வைக்கிறதை நானே கொண்டு போய்த் தின்னிறது , இங்க என்ன அழுகலே நான் விக்கிறனான்” எண்டு கை வைச்சுப் பாக்க முதலே புறுபுறுக்கத் தொடங்கீனா ஆச்சி. வெளீல இருந்து மூட்டை ஒண்டைக் கொண்டந்து இறக்கினவன், “ எணை காசு” எண்டு சொன்னதுக்கு “நான் என்ன ஓடியே போப்போறன் எண்ட ஆச்சி சொல்ல”, “உன்ன எவன் கூட்டிக்கொண்டு ஓடப் போறான் , இருக்கேலாதெண்டு தானே கட்டினவன் விட்டிட்டுப் போனவன்” எண்டு திருப்பிச் சொன்னவனுக்கு ஆச்சி ஓளவையார்த் தமிழில பதில் சொல்ல நான் அடக்கமா நிண்டன்.

கொண்டந்த பிளாஸ்டிக் பைக்குள்ள சாமாங்களை அடைஞ்சிட்டு நிமிந்து பாக்க ஆச்சி கணக்குச் சொல்லி காசை கேட்டா. நான் கணக்குப் பாக்க முதலே காசை வாங்கீட்டா ஆச்சி. சரியெண்டு பாரத்தோட பையைத் தூக்க பையின்னடை கைபிடி அறுந்திச்சுது. சத்தத்தைக் கேட்டு ஆச்சி பழைய உரபாக்கும் சணல் துண்டும் சும்மா தந்திட்டு மற்ற ஆக்களைக் கவனிக்கத் தொடங்கினா. கணக்குக்கு நல்ல மாக்ஸ் எடுத்த எனக்கு நூற்றைம்பது கிராம் பச்சை மிளகாயில இருந்து ரெண்டு கிலோ கிழங்கு வரை எல்லாச் சாமாங்களும் வாங்க எழுதாமல் ஆச்சி சொன்ன கணக்கு வீட்டை வந்து ரெண்டாந்தரம் கூட்டிப் பாக்கத் தான் சரியா வந்திச்சுது.

Dr. T. கோபிசங்கர்
யாழப்பாணம்.

சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 16 | இதில் போனால் சங்கடம் (இ.போ.ச) | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 17 | உயர்திணை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 18 | “அரிசிப் பொதியோடும் வந்தீரோ” | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 19 | பிளவு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 20 | நீண்ட வரிசையில்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 21 | கன்னிக்கால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 22 | பொறுப்பு துறப்பு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 23 | உது(தை)க்குத்தானே ஆசைப்பட்டாய்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 24 | இந்த அடி நாளைக்கு… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 25 | பக்கத்து இலைக்கு பாயாசம்…. | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 26 | காதல் திருவிழா | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 27 | தலை கால் தெரியாம… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 28 | தாண்டாக்கடல் | டாக்டர் ரி. கோபிசங்கர் …

சுவடுகள் 29 | அழையா விருந்தாளி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 30 | உண்ட களை தொண்டருக்குமாம்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 31 | சுயம் இழந்த சரிதம்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More