Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சுவடுகள் 23 | உது(தை)க்குத்தானே ஆசைப்பட்டாய்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 23 | உது(தை)க்குத்தானே ஆசைப்பட்டாய்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

8 minutes read

“அண்ணை முடிய நேரமாகுமே போகோணும்” எண்டு சொல்ல இந்தப் போத்திலுக்க ஆறு பிளேன்ரீயும் கடிக்கிறதுக்கு ஏதாவதும் வாங்கித்தாரும் எண்டு கேட்டார் தம்பிஅண்ணை. தம்பிப்பிள்ளை தம்பியாகி வயது முதிர்ச்சிக்கு அண்ணன் சேர வந்த பேர் தம்பியண்ணை. கடைசீல கணக்கில கழிக்கலாம் எண்டு காசைக் கேக்காம வேலை முடிஞ்சாச் சரி எண்டு ஓடிப்போய் கேட்டதுகளை வாங்கிக்கொண்டு வந்தன்.

பிளேன்டீயை குடுச்சிக்கொண்டு வாயும் மோட்டச் சைக்கிளும் போட்டி போட்டுக்கொண்டு புகை கக்க நட்டுக்களை திருப்பி tune பண்ணீட்டு , “இப்ப ஓடும் , பிறகு ஒருக்கா ஆனந்தன்டைக் கொண்டு போய் carburetor ஐ செய்வம் “ எண்டு சொல்லி மோட்டச்சைக்கிளைத் தந்தார். மூண்டு நாளா அலைஞ்சதுக்கு ஒரு மாதிரி முக்கித்தக்கி ஓடிற நிலமைக்கு bike வந்திட்டுது. எவ்வளவு கணக்கெண்டு கேக்கப் பதில் சொல்லமால் பத்தின பீடீ வாயில இருந்து எடுத்து மதிலில வைச்சார். எனக்கென்னவோ அந்தாளின்டை வாயில இருந்ததிலும் பாக்க பீடி சிவர்க்கரையில இருந்து புகைக்கிறது தான் கூட மாதிரி இருந்திச்சுது. எவ்வளவு எண்டு கேட்டா கணக்கு நேர சொல்ல மாட்டார் , பாத்து தாரும் எண்டு போட்டு என்னைக் கணக்கெடுக்காம அடுத்த சைக்கிளை பிரிக்கத் தொடங்கீடுவார்.

அம்மான்டை recommendation இல அண்ணா கம்பஸ்ஸுக்குப் போகத் தொடங்க அப்பா ஆராரிட்டையோ எல்லாம் கேட்டு கடைசீல இந்த மோட்டச்சைக்கிளை கண்டு பிடிச்சார். பெடியள் கண்டா பறிச்சிடுவாங்கள் எண்டு வீட்டுக்காரர் இரவு தான் கொண்டு போகத் தந்தார். பின்னுக்கு வந்த சைக்கிள் காரர் foot rest இல காலைவைச்சுத் தள்ள ஒரு மாதிரி பலன்ஸ் பண்ணி இரவோட இரவா நிலவு வெளிச்சத்தில எங்கடை வீட்டின் முதலாவது வாகனத்தின் கன்னிப் பயணம் தொடங்கியது. ஆனாலும் வீட்டை கொண்டு வராமல் நேர கொண்டு போய் கராஜ்ஜில விட்டிட்டு வந்தம்.

அண்ணாக்கு எண்டு தான் வாங்கினது ஆனாலும் உள் வீட்டு ragging மாதிரி நான் தான் maintenance. இதைப் பண்ணினாத்தான் எப்பவாவது ஓடக் கிடைக்கும் எண்ட நம்பிக்கையில் நானும் கராஜ்ஜுக்குப் போனான்.

அப்ப ஊரில பெரும்பாலான தொழில் செய்யிறாக்கள் இந்த வேலைக்கு விலை இவ்வளவு தான் எண்டு காசுக் கணக்கு கேக்கிறேல்லை. வாயைத்திறந்து நேர சொல்லவும் மாட்டினம் கேட்டாப் பாத்துத் தாங்கோ எண்டு தான் பதில் வரும். நானும் தம்பிஅண்ணையை திருப்பித் திருப்பிக் கேக்க, அண்டைக்கு இப்பிடித்தான் ஒரு சைக்கிள் செய்தானான் அவர் ஐஞ்ஞூறு தந்தவர் நீர் படிக்கிற பெடியன் தானே எண்டு அவர் இழுக்க நான் வாங்கின ரீ கணக்கை நெச்சபடி முன்னூறை குடுக்க, பாத்திட்டு சரி “அடுத்தமுறை பாத்து எடுப்பம்” எண்டு சொன்னார். அம்மாவுக்கு கராஜ் வழிய போய் தூங்கிறது விருப்பமில்லை, அங்க போனா கெட்டுப் போடுவன் எண்டு ஆனாலும் வழியில்லாமல் போக விடுவா. அங்க குந்திக்கொண்டு இருக்கேக்க பத்தும் பலதும் தெரிய வரும் சில கதைகள் தொடங்கேக்க கண்காட்டுப்பட இடம் பொருள் ஏவல் அறிந்து கதைகள் நிப்பாட்டுப்படும்.

காலத்தின் தேவையில் சந்திக்கு சந்தி ஒரு சைக்கிள் கடை மாதிரி மோட்டச்சைக்கி்ள் கராஜும் வரத் தொடங்கீட்டு. கராஜ்காரருக்கு மோட்டச்சைக்கிளோட ஆரும் வாறது bank இல போடற நிரந்தர வைப்பு மாதிரித்தான். அதோட நாங்களும் சைக்கிளைப் பத்தி ஒண்டும் தெரியாமல் போய் ஒரு மாதத்தில எந்த நட்டுக்கு எத்தினையாம் நம்பர் சாவி எண்டு தெரியிற அளவுக்கு வளந்திடலாம்.

அப்ப வாகனம் ஓட லைசென்ஸ் எல்லாம் தேவேல்லை. ஆனால் கொஞ்சம் மெக்கானிக் வேலை தெரிஞ்சாத் தான் மோட்டச்சைக்கிள் ஓடலாம். பற்றிரிக்கு எதிர்ப்பக்கத்து box இல பழைய பிளக்குகள், சைக்கிள் brake ன்டை பழைய cable கம்பி, தேஞ்ச வால் பிளேட், நெருப்புப் பெட்டி பழைய துணி எல்லாம் இருக்கும், இடைக்கிடை ஓடிற மோட்டச்சைக்கிள் அடிக்கடி நிண்டா இதுகள் தேவை.

பிளக்கை மாத்தினாச்சரி எண்டு தொடங்கி Timing chain அடிக்குது, ஒயில் சீல் சரியில்லை, காஸ்கெட் மாத்தோணும், lathe இல கொண்டு போய் boring செய்யோணும், oil rings சரியில்லை எண்டு போய் கடைசீல பிரிச்சுத் தான் செய்யோணும் எண்டு மோட்டச்சைக்கிளைப் பற்றி முழு அறிவும் கிடைக்கும்.

தடை அமுலாக்கத்தின்டை உச்சத்தில வந்த கஸ்டத்தில கன கண்டுபிடிப்புகள் ஊரில வந்திச்சிது. அதிலையும் மண்ணெண்ணை மோட்டச்சைக்கிள் modification காலத்தின் கண்டுபிடிப்பு. Saline tube ஐ எடுத்து காத்துப்போற கறுப்பு air hose இல ஓட்டை போட்டு அதைக் கொண்டு போய் carburetor இல கூடப் பெற்றோல் வந்தா இருக்கிற overflow ஒட்டைக்குள்ள செருகி வெளி saline tube இல ஒரு syringe கவிட்டு செருகிறது தான் modification இன்டை முதல் படி. அங்கங்க இருக்கிற மினி பெற்றோல் ஸ்டெசனில பாதி வெட்டின பரலில மண்ணெண்ணை, கொஞ்சம் போத்திலில பெற்றோல், can இல ஒயில், singer oil குப்பி / சூப்பி எல்லாம் விக்க இருக்கும். அப்ப மண்ணெண்ணை வியாபாரிகள் தான் பெரிய கடை முதலாளிகள் .

ஒவ்வொரு அங்குலம் ராணுவம் பின்வாங்க அடிக்கிற ஒவ்வொரு அடிக்கும் விலைகளும் சாமாங்கள் தடைகளும் கூடும் . கடலில கப்பல் அடிச்சா கடைக்காரர் எல்லாம் சந்தோசத்தில கடையை மூடினவங்கள் எண்டு நாங்கள் நம்பினம் . ஆனால் பாத்தா ரெண்டாம் நாள் கன சாமாங்கள் மூண்டு மடங்கு விலை கூடி இருக்கும் . Talk of the town கைப்பற்றின ஆயுதங்களாக இருக்கிற gap இல ஏறின விலைகள் கவனிக்கபடாமல் போயிடும். இதைத்தான் பிறகு இலங்கை அரசாங்கமும் பாத்து, cricket match நடக்கேக்க தான் பல விலையேற்றங்களை செய்யவும் தரை இறக்கங்கள் பற்றிய நிலவரத்தை வெளியிடவும் தொடங்கினது.

பெற்றோல் குப்பியை/ சூப்பியை வைக்கிறதுக்கு செட்டையில ஒரு வெட்டின பிளாஸ்டிக் போத்திலை fix பண்ணி அதுக்குள்ள தான் வைக்கிறது. பிறேக் கேபிளில கட்டி இருக்கிற சேலைன் ரியூபை எடுத்து போலியோ மருந்து மாதிரி மூண்டு சொட்டு மட்டும் விட்டிட்டு வாயால காத்தடிக்கிற மாதிரி மூலம் தள்ளிற அளவுக்கு ஊதினபடி கிக்கரை உதைக்கத்தொடங்கி ஒரு பத்து தரம் உதைக்கவிட்டி ஒருக்கா கேக்கிற இஞ்சின் சத்தம் மூண்டு மாதம் பின்னால சுத்தின பெட்டை ஒருக்கா திரும்பிப் பாக்கேக்க வாற அதே நம்பிக்கையைத் தரும் . எப்பிடியும் start பண்ணிடலாம் எண்டு தொடர்ந்து முயற்சித்தால் அது பெட்டையோ மோட்டச்சைக்கிளோ முயற்சி திருவினையாக்கும்.

Accelerator ஐயும் chalk ஐயும் அளவாப்பிடிச்சு முறுக்க சைலன்சர் அடைச்சு வெடிச்சு காபன் பறக்க இன்னும் கூட முறுக்க இஞ்சின் கொஞ்சம் நிதானத்துக்கு வரும் . மிச்சப் பெற்றோல் இருந்தாலும் எண்டு இன்னும் ஒருக்கா சேலைன் ரியூபை ஊதீவிட்டட்டுத் தான் ஓடத்தொடங்கிறது. அப்ப ஒருக்கா start பண்ணிற வாகனங்களின்டை இஞ்சினை நிப்பாட்டிறேல்லை ஏனெண்டால் முழு நாள் ஒடிற மண்ணெண்ணைச் செலவு மூண்டு சொட்டிலும் பாக்க குறைவு எண்ட படியாத்தான். அதோட நிப்பாட்டீட்டு இறங்கிப் போகேக்க மறக்காம துறப்பைக் கழட்டி அதோட குப்பியை எடுத்து பொக்கற்றுக்க வைச்சிடுவினம். பெற்றோல் குப்பி / சூப்பி வைச்சிருக்கிற ஆக்கள் அதை ரொலக்ஸ் மணிக்கூடு மாதிரி பெருமையா கொண்டு திரிவினம் அதிண்டை பெறுமதி தெரிஞ்சு.
என்னதான் start வராட்டியும் மூண்டு சொட்டுக்கு மேல பெற்றோல் விடுறேல்லை . அடிச்சு அடிச்சே பிளக்கை சூடாக்கிறது இல்லாட்டு பிளக்கை கழட்டி நெருப்பில பிடிச்சிட்டு திருப்பியும் start பண்ணிறது .

“ செருப்புக் கிழியும் வரை உதை,
கால் தேயும் வரை உதை,
கிக்கர் உடையும் வரை உதை“ எண்ட தாரக மந்திரத்தோட தான் ஒவ்வொரு நாளும் காலமை தொடங்கும் எண்டாலும் start பண்ணீட்டு கப்பலோட்டிய பரம்பரை எண்ட பொருமையோட மோட்டச்சைக்கிளையும் நாங்கள் ஓடித்திரியறது.

Dr. T. கோபிசங்கர்
யாழப்பாணம்

சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 16 | இதில் போனால் சங்கடம் (இ.போ.ச) | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 17 | உயர்திணை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 18 | “அரிசிப் பொதியோடும் வந்தீரோ” | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 19 | பிளவு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 20 | நீண்ட வரிசையில்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 21 | கன்னிக்கால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 22 | பொறுப்பு துறப்பு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More