கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்தைக் கடந்தது

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்தைக் கடந்துள்ளது.

உலகின் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் கொரோனாவுக்கு எதிரான சரியான மருந்து இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்தைக் கடந்துள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் மாத்திரம் இதுவரையில் ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 32 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

அடுத்ததாக பிரேஸிலில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 517 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் இந்தியாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 923ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, தற்போதைய நிலைவரப்படி, 2 கோடியே 77 இலட்சத்து 33 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 70 இலட்சத்து 4 ஆயிரத்து 978 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 311 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் கொரோனாவில் இருந்து 1 கோடியே 98 இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்