எலிசபெத் மகாராணியை அரச தலைவர் பதவியிலிருந்து நீக்க பார்படோஸ் திட்டம்

எலிசபெத் மகாராணியை அரச தலைவர் பதவியிலிருந்து நீக்கி, பார்படோஸ் குடியரசாக மாற விரும்புகிறது என கரீபியன் நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

1966ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற முன்னாள் பிரித்தானிய காலனியான பார்படோஸ், ஒரு காலத்தில் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த, வேறு சில நாடுகளைப் போலவே முடியாட்சியுடன் முறையான தொடர்பைப் பேணி வருகின்றது.

இந்தநிலையில் பார்படோஸ் ஆனுனர் ஜெனரல் சாண்ட்ரா மேசன் நாட்டின் பிரதமர் மியா மோட்லி சார்பில் நிகழ்த்திய உரையில், ‘எங்கள் காலனித்துவ கடந்த காலத்தை முற்றிலுமாக விட்டுவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. பார்படியர்கள் ஒரு பார்பேடிய நாட்டுத் தலைவரை விரும்புகிறார்கள். இது நாம் யார், எதை அடைய முடியும் என்பதில் நம்பிக்கையின் இறுதி அறிக்கை.

ஆகவே, பார்படோஸ் முழு இறையாண்மையை நோக்கி அடுத்த தர்க்கரீதியான நடவடிக்கையை எடுத்து, நாம் கொண்டாடும் நேரத்தில் குடியரசாக மாறும்’ என கூறினார்.

முன்னாள் பிரித்தானிய காலனி, சுதந்திரம் பெற்று 45 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசு அந்தஸ்துக்கான இந்த உந்துதல் வருகிறது. சமூக ஊடகங்களில் சிலர் இந்த நடவடிக்கையை கொண்டாடினர்.

இந்த வளர்ச்சி ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ இயக்கத்தின் உலகமயமாக்கலை குறிக்கிறது என்று வொஷிங்டனின் டி.சி அடிப்படையிலான சிவில் உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் குழுவின் தலைவர் கிறிஸ்டன் கிளார்க் கூறினார்.

ஆசிரியர்