December 4, 2023 7:21 am

உக்ரைனில் மற்றுமொரு அணை குண்டு வீசி தகர்ப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
உக்ரைனில் மற்றுமொரு அணை குண்டு வீசி தகர்ப்பு

உக்ரைனில் மற்றுமொரு அணையை ரஷ்யா குண்டு வீசி தகர்த்துள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆக்கிரப்புப் பகுதிகளில் எதிர்த் தாக்குதல் நடத்தி, உக்ரைன் படையினர் முன்னேறி வருவதைத் தடுப்பதற்காக இந்தச் செயலில் ரஷியா ஈடுபட்டதாக உக்ரைன் இராணுவம் கூறியுள்ளது.

இது குறித்து கொசான் பிராந்திய படைப் பிரிவு செய்தித் தொடா்பாளர் வேலரி ஷொஷென் கூறியுள்ளதாவது, “மோக்ரி யாலி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை ரஷ்ய ஆக்கிரமிப்புப் படையினா் குண்டுவீசி தகர்த்துள்ளனர். இதன் காரணமாக அந்த நதியின் இரு கரைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

“மோக்ரி யாலி நதிக் கரையோர ஆக்கிரப்புப் பகுதிகளில் எதிர்த் தாக்குதல் நடத்தி, உக்ரைன் படையினர் முன்னேறி வருகின்றனர். அவா்களது முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைப்பதற்காக அந்த அணையை ரஷ்யா தகர்த்துள்ளது. எனினும், ரஷ்யா வின் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. உக்ரைன் இராணுவத்தின் முன்னேற்றம் தொடர்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்