செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் கடும் வெப்பம்; 40 பேர் பலி

மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் கடும் வெப்பம்; 40 பேர் பலி

0 minutes read

மத்தியத் தரைக்கடல் பகுதியில் தற்போது கோடைக்கால வெயிலுடன், காட்டுத்தீ சேர்ந்து சுட்டெரிக்கிறது.

இதுவரை இல்லாத அளவில் தகிக்கும் வெப்பத்தால் ஏறக்குறைய 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலி , கிரீஸ், குரோஷியா உட்பட குறைந்தது 9 மத்தியத் தரைக்கடல் நாடுகளில் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பிரபல சுற்றுலாத் தலங்களும் காட்டுத்தீயில் சிக்கியுள்ள நிலையில், வட ஆபிரிக்காவின் அல்ஜீரியா (Algeria) நாட்டில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களுள் 10 இராணுவ வீரர்களும் உள்ளதுடன், மீட்புப் பணிகளின்போது அந்த வீரர்கள் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கிரீஸில் பெரும்பாலான இடங்களில் காட்டுத்தீயை அதிகாரிகள் கட்டுப்படுத்தியுள்ளனர்.

கோர்ஃபூ (Corfu), ரோட்ஸ் (Rhodes) ஆகிய பிரபல சுற்றுலாத் தலங்களிலிருந்து வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் உள்பட 20,000 பேர் ஹோட்டல்களிலிருந்து வெளியேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.