September 28, 2023 10:01 pm

ஹவாய் காட்டுத்தீ: 1,300க்கும் மேற்பட்டோர் மாயம்; கனடாவிலும் அவசரநிலை பிரகடனம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
கனடா

அமெரிக்கா, ஹவாய் தீவின் மேற்கே உள்ள மவுய் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக முக்கிய நகரங்களான ஹலைனா, குலா உள்ளிட்ட பகுதிகளுக்கு காட்டுத்தீ பரவியது.

இதனால் பெரும்பாலான வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் தீயில் கருகி நாசமாகின.

வீடுகள், செல்போன் கோபுரங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாகி நாசமாகின. சேத மதிப்பு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. காட்டுத்தீ பரவல் குறையாத காரணத்தினால் சேத மதிப்பு அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறினர்.

இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 106 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1,300க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது.

மீட்பு பணிகளில் உதவும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை பெறும் பணியும் நடக்கிறது.

ஆள் பற்றாக்குறை காரணமாக அமெரிக்காவில் இருந்து இராணுவம் களம் இறங்கியுள்ளது.

கனடாவிலும் அவசரநிலை பிரகடனம்

இந்நிலையில், கனடாவின் வடமேற்கு மாகாணங்களிலும் கட்டுங்கடங்காமல் காட்டுத்தீ பரவுகிறது.

தெற்கு மற்றும் வடமேற்கு ஸ்லேவ் பகுதிகளில் நிலைமை கைமீறி போனதை கனடா அரசு அறிந்துள்ளது.

இதனால் காட்டுத்தீ பரவி இருக்கும் பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தி, மீட்புப்பணியில் மீட்புப் பணி வீரர்களை அரசு களம் இறக்கியுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்