December 7, 2023 9:54 am

ரஷ்யா-வடகொரியா ஆயுத ஒப்பந்தம்: புதினை சந்திக்கவுள்ள கிம்ஜாங் உன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
ரஷ்யா-வடகொரியா ஆயுத ஒப்பந்தம்: புதினை சந்திக்கவுள்ள கிம்ஜாங் உன்

ரஷ்யா-வடகொரியா ஆகிய இரண்டு நாடுகள் இடையே ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் இம்மாதம் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதன்போது, ரஷ்ய ஜனாதிபதி புதினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜிம்ஜாங் உன், ரஷ்யாவுக்கு ரயிலில் பயணம் மேற் கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இரு நாட்டு தலைவர்கள் எந்த இடத்தில் சந்தித்து பேசுவார்கள் என்று தெளிவான விவரம் வெளியாகவில்லை.

ஆனால், பசிபிக் துறைமுக நகரமான விளாடிவோ ஸ்டாக்கில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று தெரிகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்