செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சட்ட அமைச்சரின் நியமனத்தைத் தொடர்ந்து துருக்கி நாடாளுமன்றத்தில் மோதல்!

சட்ட அமைச்சரின் நியமனத்தைத் தொடர்ந்து துருக்கி நாடாளுமன்றத்தில் மோதல்!

0 minutes read

சட்ட அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து துருக்கி நாடாளுமன்றத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. பதவியேற்பு நிகழ்வின் போது எதிர்க்கட்சியினரும் ஆளுங்கட்சியினரும் இடையே வாக்குவாதம் உருவாகி, அது மோதலாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டவர் துருக்கியே அரசுத் தரப்பு வழக்கறிஞர் அக்கின் குர்லெக் (Akin Gurlek) ஆவார். கடந்த ஆண்டு, இஸ்தான்புல் மேயர் எக்ரெம் இமாமொக்லுவை கைது செய்ய அவர் உத்தரவிட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நடவடிக்கைக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்களும் கலவரங்களும் வெடித்தன.

மேலும், அக்கின் குர்லெக் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவ்வழக்குகள் அரசியல் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டவை என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், அவரது சட்ட அமைச்சர் நியமனம் அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.