செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக வெனிசுலா – ட்ரம்ப் வெளியிட்ட புகைப்படம்!

அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக வெனிசுலா – ட்ரம்ப் வெளியிட்ட புகைப்படம்!

0 minutes read

அமெரிக்காவின் ஒருங்கிணைந்த பகுதியாக வெனிசுலாவை இணைக்கும் வரைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வரைப்படத்தில் அமெரிக்கக் கொடியும், ’51வது மாநிலம்’ என்ற குறிப்பும் இடம்பெற்றுள்ளன.

தனது நாடு அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாறுவதை ஒருபோதும் கருத்தில்கொள்ளவில்லை என வெனிசுலா ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) கூறியதை தொடர்ந்து, இந்த வரைபடம் வந்துள்ளது.

இதற்கிடையே வெனிசுலாவின் எதிர்க்கட்சி தேர்தல்களை நடத்தக் கோரியுள்ளது. மே 1 அன்று புதிய தேர்தலுக்கான வாய்ப்புகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, ​​ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தனக்குத் “தெரியாது” என்றும், “அது எப்போதாவது” நடக்கும் என்றும் கூறியிருந்தார்.

இதேவேளை, முன்னதாக கருத்து வெளியிட்டிருந்த ட்ரம்ப், வெனிசுலாவை தனது 51ஆவது மாநிலமாக மாற்றுவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.