செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் ரஸ்ஸல் பிராண்டின் சிறைச்சாலை வீடியோவை நீக்குமாறு கூகுளிடம் இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தல்

ரஸ்ஸல் பிராண்டின் சிறைச்சாலை வீடியோவை நீக்குமாறு கூகுளிடம் இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தல்

1 minutes read

பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்ற நகைச்சுவை நடிகர் ரஸ்ஸல் பிராண்டின் சிறைச்சாலை செய்தி அடங்கிய யூடியூப் வீடியோவை நீக்குமாறு இங்கிலாந்து பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், கூகுள் நிறுவனத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

4பெண்களுக்கு எதிராக ஒரு பாலியல் வன்புணர்வு மற்றும் 3 பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ரஸ்ஸல் பிராண்டுக்கு 10 ஆண்டுகள் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், தனது குற்றமற்ற தன்மையை வலியுறுத்தி அவர் வெளியிட்ட அறிக்கையை அவரது மனைவி லோரா பிராண்ட் வாசித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை யூடியூப்பில் பதிவேற்றியுள்ளார்.

இந்த வீடியோவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் இங்கிலாந்து அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிறையில் இருக்கும் கைதிகள் வீடியோ அல்லது சமூக ஊடகங்கள் வாயிலாக கருத்துகளை வெளியிடுவதைத் தடுக்கும் சட்டங்களை ரஸ்ஸல் பிராண்ட் மீறியுள்ளாரா என்பது தொடர்பில் தற்போது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக நிறுவனங்கள் இத்தகைய வீடியோக்களை நீக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் அவருடைய செய்திகளைக் கேட்க வேண்டிய நிலை ஏற்படக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

சட்டத்தில் உடனடி மாற்றங்களைக் கொண்டுவரப் போவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், சமூக ஊடக நிறுவனங்கள் பொறுப்புடன் செயற்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைக் கருத்தில்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, உள்ளடக்கங்களை நீக்குவதற்கு அரசாங்கத்தால் நிறுவனங்களை கட்டாயப்படுத்த முடியாது எனஇங்கிலாந்து அரசாங்க அமைச்சர் மேத்யூ பென்னிகூக் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். வீடியோவை நீக்குவது கூகுளின் தீர்மானத்துக்கு உட்பட்டது எனக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய உள்ளடக்கங்களைப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே அரசாங்கம் அதனை நீக்கக் கோரியுள்ளதாகவும், இது தொடர்பில் கூகுள் நிறுவனத்துடன் நெருக்கமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

ரஸ்ஸல் பிராண்டின் சிறைச்சாலை வீடியோவை நீக்குமாறு கூகுளிடம் இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.