March 26, 2023 11:35 pm

கனடிய பெண்ணை விவாகரத்து செய்த இந்திய கோடீஸ்வரர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரரும் நடிகருமான அருனோதை சிங்குக்கும், கனடிய பெண்ணுக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கிய நிலையில் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்திருக்கிறார்.

$10 மில்லியன் சொத்துக்கு சொந்தகாரரான அருனோதை சிங் நடிகராகவும் உள்ளார்.

இவருக்கும் கனடாவை சேர்ந்த லீ அன்னா எல்டன் என்ற பெண்ணுக்கும் கடந்த 2016ல் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் தம்பதி இடையே 2019ல் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அன்னா கனடாவுக்கு சென்றார்.

அந்த சமயத்தில் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலில் உள்ள நீதிமன்றத்தை நாடிய அருனோதை மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என கோரினார்.

அவரின் கோரிக்கை ஏற்கபட்டு விவாகரத்தும் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது விவாகரத்தை எதிர்த்து அன்னி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அதில் தான் கனடாவில் இருந்த போது தனது பக்கம் நியாயத்தை கேட்காமல் விவாகரத்து கொடுத்தது செல்லாது, எனவே என் பக்கத்தின் நியாயத்தை தெரிவிக்க அனுமதியுங்கள் என பதிலடி கொடுக்கும்படி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையில் கணவன் – மனைவி இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கான காரணம் குறித்து தெரியவந்துள்ளது.

அருனோதை ஏற்கனவே தனது வீட்டில் நாயை வளர்த்து வந்த நிலையில் அன்னாவும் புதிய நாயை வாங்கியிருக்கிறார்.

இதையடுத்து இரண்டு நாய்களுக்கு அடிக்கடி சண்டை போட்டுள்ளது, இது தொடர்பாக தம்பதி இடையில் பிரச்சினை மற்றும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.

இதோடு அன்னா கர்ப்பமாகாதது தொடர்பிலும் கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

அன்னாவின் மனு மீதான விசாரணை அக்டோபர் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்