தாயால் 40 அடி உயரத்திலிருந்து வீசப்பட்ட குழந்தைகள்………

பிரான்ஸ் நாட்டில் தீப்பிடித்த 40 அடி உயர வீட்டிலிருந்து வெளியே வீசப்பட்ட இரு குழந்தைகளை அக்கம்பக்கத்தினர் காயமின்றி காப்பாற்றினர்.

கிரனோபில் என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் திடீரென தீப்பிடித்தது. கொளுந்து விட்டெரியும் நெருப்பும், கண்ணை மறைக்கும் கரும்புகையும் வெளிப்பட்டன.

அதனால் வீடுகளுக்கு உள்ளே சிக்கியிருந்தவர்கள் அபயக்குரல் எழுப்பினர். அந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் தனது 3 வயது குழந்தையை அதன் தாய் ஜன்னல் வழியாகத் தூக்கி வீசினார். கீழே நின்றவர்கள் சரியான தருணத்தில் குழந்தையைப் பிடித்தனர்

அடுத்த சில நொடிகளில் அதே போல தனது 10 வயது மகளையும் ஜன்னல் வழியே வெளியே தள்ளினார். அந்தச் சிறுமியையும் கீழே நின்றவர்கள் பத்திரமாகப் பிடித்தனர். இரு குழந்தைகளும் காயமின்றி காப்பாற்றப்பட்டனர்.

ஆசிரியர்