அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? | அமைச்சர் ஜெயக்குமார்

முதல்வர் வேட்பாளர் பற்றி உரிய நேரத்தில் முடிவு- அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை காசிமேட்டில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பற்றிய முடிவை கட்சி உரிய நேரத்தில் எடுக்கும். முதல்வர் வேட்பாளர் பற்றி பொதுவெளியில் பேசுவது கட்சியை பலவீனப்படுத்துவதாக அமையும்.

எடப்பாடி பழனிசாமிதான் என்றும் முதல்வர் என கூறிய ராஜேந்திர பாலாஜியின் கருத்து அதிமுகவின் கருத்தல்ல. அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்.

பாஜக தலைமையில்தான் கூட்டணி என்ற கருத்தை அதன் மாநிலத் தலைவர் முருகன் கூறவில்லை. பாஜக தலைமையில்தான் கூட்டணி என அதன் மாநிலத் தலைவர் முருகன் கூறினால் உரிய பதிலை அதிமுக தெரிவிக்கும். கூட்டணி பற்றி தமிழக பாஜக தலைவர் முருகன் கருத்து கூறிய பிறகே அதிமுக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும்.

அதிமுக என்ற ஆலமரம் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது; இந்த மரம் அழியாது. எஸ்.வி.சேகர் சிறைக்கு செல்ல வேண்டும் என்பது ஆசையாக இருந்தால் அதை நிறைவேற்றுவோம். எஸ்.வி.சேகர் தேசியக்கொடியை அவமதித்து, முதல்வரை அவதூறாக பேசியதை ஏற்க முடியாது… இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர்