தேயிலை தோட்டத்தில் பாறையில் சிக்கி பலியான கரடி

நீலகிரி மாவட்ட   வனகோட்டம்,   கட்டப்பெட்டு   வனசரகத்திற்கு   உள்பட்ட கப்பட்டி பள்ளியாடா தேயிலை தோட்டத்தில்,  ஐந்து வயது பெண் கரடி ஒன்று  எறும்புகளை தின்பதற்காக அங்கிருந்த கற்பாறையின் அடியில் தோண்டியுள்ளது.    
சமீபத்திய மழையால் மண் ஈரம் கண்டுள்ளதால்,  தோண்ட, தோண்ட மண் அதிகமாக வெளி வரவே,திடீரென பாறை சரிந்து கரடியின் வலது காலை அமுக்கி  உள்ளது. 
எவ்வளவோ முயன்றும் கரடியால் தன் காலை விடுவிக்க முடியவில்லை. 
தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று முயற்சி மேற்கொண்டார். 
பாறை பெரியதாக இருந்ததால் அதை நகற்ற முடியவில்லை. இதையடுத்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு மயக்க ஊசி செலுத்தி காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் உணவு, நீர் இல்லாமல் அதிக நேரம் இருந்ததால் கரடியை காப்பாற்ற முடியவில்லை என்று  வனதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  …………………………………

வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து A.N.கெளடர்.  

ஆசிரியர்