Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழகத்தில் இ–பாஸ் சேவை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

தமிழகத்தில் இ–பாஸ் சேவை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

1 minutes read

தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுத்தலுக்கு அமைய இ- பாஸ் நடைமுறை இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வருகிறது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 7ஆம் கட்ட ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்களில் கடுமையான நடைமுறையாக இ – பாஸ் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் குறித்த இ – பாஸை வழங்குவதில் சில முறைக்கேடுகள் நடப்பதாகவும், மருத்துவம்  மற்றும் திருமணம் ஆகிய தேவைகள் தவிர்த்து பிற தேவைகளுக்காக இ – பாஸ் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டது.

இதற்கிடையில் இ – பாஸ் நடைமுறையை இரத்து செய்வதாக இந்திய மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் தமிழகத்தை பொருத்தவரையில் குறித்த சேவை நடைமுறையில் இருக்கும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து  கட்டாய தேவைகளுக்காக ஆதார் அல்லது ரேஷன் அட்டை விவரங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கப்பெறும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் குறித்த சேவை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More