செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைவடைந்தது!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைவடைந்தது!

1 minutes read

இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, இரண்டாவது நாளாக 2 இலட்சத்திற்கு கீழ் குறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில், 1 இலட்சத்து 73 ஆயிரம் பேருக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 இலட்சத்தை கடந்து சென்றுக்கொண்டிருந்த நிலையில் தொடர் முழு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக படிப்படியாக குறைவடைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனாலும் குறித்த வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் 3,617 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 2 இலட்சத்து 28 ஆயிரத்து 724 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 இலட்சத்து 84 ஆயிரத்து 601 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More