செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ரயில் முன்பு தள்ளிவிட்டு மாணவி படுகொலை | தந்தையும் உயிரிழப்பு

ரயில் முன்பு தள்ளிவிட்டு மாணவி படுகொலை | தந்தையும் உயிரிழப்பு

1 minutes read

இந்தியாவில் சென்னையை அடுத்து ஆலந்தூர் பொலிஸ் குடியிருப்பைச் சேர்ந்த மாணவி காதல் விவகாரத்தால் நேற்று  முன்தினம் இளைஞன் ஒருவனால் ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மாணவி ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்டு தலை துண்டான நிலையில் தண்டவாளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் கதறி துடித்தனர்.

மாணவியின் தந்தை  மகளின் இழப்பை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை கொலை செய்து விட்டு தலைமறைவாகிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சமூக பிரச்சனைகள் குறித்து குரல் கொடுத்து வரும் நடிகை கஸ்தூரி மாணவி கொலை குறித்து கோபமாக டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

அவர் அதில்,

சென்னை சோகம் : சத்யாவின் கொடூரமான கொலையை கேள்விப்பட்ட அவரது அப்பா மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சத்யப்ரியாவின் தாய் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளார், சதீஷின் தந்தை அதே காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்தார். போலீசுக்கே இந்த கொடுமைனா என்னத்த சொல்லுறது. என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் விருப்பமில்லாத பெண்ணை தொடர்ந்து தொந்தரவு பண்ணுறது விடாமுயற்சி, வீரம் புண்ணாக்குன்னு நம்புறவன மட்டுமில்ல, நம்ப வச்சவனையும் சேர்த்து தண்டிக்கணும். அது எந்த தலைவனா இருந்தாலும் சரி, சினிமாவா இருந்தாலும் சரி. வயிறெரியுது. சத்யா என குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.