December 2, 2023 1:48 pm

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக  பிரதமர் மோடி வாய் திறப்பாரா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக  பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சந்தம் எழுப்பி  வருகின்றன நிலையில் பாஜக தரப்பு மோடிக்கு ஆதரவாக கருத்தைவெளியிட்டு வரும் நிலையில் வாய் திறந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் மோடி.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.

இதன் மீதான விவாதம் நேற்றுமுன்தினம் தொடங்கிய நிலையில், நேற்றும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது  விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ராகுல்காந்தி பா.ஜ.க. அரசை விமர்சித்து காட்டமாகப் பேசியிருந்தார்.

அதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி. உரையாற்றினார். இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் பதிலளித்தார்.

மேலும், மணிப்பூரில் அனைத்துப் பிரிவினரும் இணைந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இதையடுத்து இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி இன்று பதில் உரை வழங்குகிறார். தன் மீதும் மத்திய அரசின் மீதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிப்பார்.

குறிப்பாக ராகுல் காந்தியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி நிச்சயம் பதிலடி கொடுப்பார் என பா.ஜ.க. தரப்பு தெரிவித்தன.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்