நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட ஐவரில் மூவர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் ஏனைய இருவரும் குவைத்தில் இருந்து திரும்பியவர்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 97ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, வைரஸ் தொற்றிலிருந்து மேலும் நால்வர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக இரண்டாயிரத்து 883 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், மேலும் 202 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன் நாட்டில் 12 பேர் வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்