Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இருபதாயிரத்திற்கு மேற்பட்ட பிள்ளை செல்வங்களை இழக்க செய்துள்ளது

இருபதாயிரத்திற்கு மேற்பட்ட பிள்ளை செல்வங்களை இழக்க செய்துள்ளது

3 minutes read

பத்தாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதானது இன்று இருபதாயிரத்திற்கு மேற்பட்ட பிள்ளை செல்வங்களை இழக்க செய்துள்ளது என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்தள்ளார்.

ஐந்து மற்றும் ஐந்துக்கு மேற்பட்ட பிள்ளைகளை பெற்ற குடும்பங்களிற்கு போசாக்கான உணவு வழங்கும் திட்டம் இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கட்ட வி்டயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மெலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சியின் பிரபல பாடசாலையா க விளங்கும் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் தரம் ஒன்றில் பாடசாலைக்கு மாணவர்களை இணைக்கும் போது தேர்வு வைக்கப்பட்ட பின்னரே மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள். கடந்த வருடம் குறித்த பாடசாலையில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் குறைவடைந்து, 80 வரையான விண்ணப்பங்கள் மாத்திரமே சமர்ப்பக்கப்பட்டது.

இந்த வருடமும் பரீட்சைகள் ஏதும் இல்லாது இணைத்துக்கொள்ளும் அளவிற்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது. உள்ளுர் பாடசாலைகளில் ஒரு பிள்ளையை சேர்ப்பதற்கு கூட முடியாத நிலை தற்போது இருக்கின்றது. பாடசாலையில் தரம் ஒன்று இயங்குகின்றது என்பதை காண்பிப்பதற்காக வேறு கிராமங்களிலிருந்து பிள்ளைகளை கொண்டுவந்து சேர்பித்து புள்ளிவிபரத்தை காண்பிக்க வேண்டிய நிலை கிராம புற பாடசாலைகளிற்கு தற்போது ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையானது துறைசார்ந்த மற்றம் உயர்கல்வியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தப்போகின்றது. தற்போது பிறப்பு வீதம் குறைந்துள்ளது. அத்தோடு நாட்டைவிட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளை நோக்கி உழைப்பினை நோக்கி செல்வதாக கூறிக்கொண்டு நூற்றுக்கணக்கானோர் வெளியேறிக்கொண்டிருக்கின்றார்கள். யுத்தம் நிறைவுற்று 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் புலம்பெயர்ந்து இருந்த 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களில் எத்தனைபேர் மீள நாடு திரும்பியுள்ளனர் என்றால் இலலை என்றே கூறக்கூடியதாக இருக்கின்றது. 


இவ்வாறான நிலையானது மற்றம் பிறப்ப வீத குறைவானது எதிர்காலத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தப்போபுாகின்றதது என்பதுடன் நலிவுறுத்தப்போகின்றது என்ற செய்தியானது அபாயமானது. மக்களிற்கு வீதிகள், வீதி விளக்குகள் போடுவதும், கழிவுகளை ஏற்றிவிட்டு செல்வதற்கு அப்பாலே நாங்கள் சார்ந்த சமூகத்தின் இருப்பை பற்றியும் அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக  கல்வி, பொருளாதாரம் அறிவியல் ஆகியவற்றில் எழுச்சிசை ஏற்படுத்த வேண்டிய மக்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்ற சபையின் முயற்சியை இன்று நிறைவு செய்திருக்கின்றது என்று நினைக்கின்றேன்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றபோதுதான் கண்டாவளை பிரதேசத்தில் 33000 குடும்பங்களிலே 9 பேரைதான் நாங்கள் தேடி எடுத்திருக்கின்றோம். இவ்வாறான நிலையில் மேலும் முன்னுற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றோம். 2021ம் ஆண்டில் நான்கு மற்றும் நான்கிற்கு மெற்பட்ட பிள்ளைகளை பெறுகின்ற குடும்பங்களை ஊக்குவிக்க வேண்டியவர்களாக இன்று இருக்கின்றோம். வெளிநாடுகளில் இரண்டு பிள்ளைகளுடன் நிறுத்திக்கொள்கின்றார்கள். முதலாவது பிள்ளை தந்தைக்கும் இரண்டாவது பிள்ளை தாய்க்கும் என்கின்றார்கள். மூன்றாவது பிள்ளை அரசுக்கென்று சொல்லி மூன்றாவது பிள்ளையின் செலவுகளை அரசு பொறுப்பேற்கின்றது வெளிநாடுகளிலே. அவ்வாறான திட்டத்தின் ஊடாக மூன்றாவது பிள்ளையை பெறுவிக்க அந்த நாட்டு அரசாங்கம் ஊக்குவிக்கின்றது. 
இன்று எமது பெற்றாரிடம் இருக்கக்கூடிய பொருளாதார நலிவு மூன்றாவது பிள்ளையை பெற்றெடுப்பத்லி சவாலாக இருக்கின்றது. யுத்த்தினால் கொல்லப்பட்ட குறைந்தது பத்தாயிரமளவிலான இளைஞர்களின் மனைவிமார் இன்றும் இளவயதிலே திருமணம் செய்யாது இருக்னிறார்கள். அவளம் அவ்வாறு இல்லாமலே செய்யப்பட்டிருக்கின்றது. அவ்வாறான இளம் பெண்கள், கணவனை இழந்த பெண்கள் பல செல்வங்களை பெற்றுத்தர வேண்டியவர்கள் தனியாகவே வாழ்ந்து வருகின்றார்கள். பத்தாயிரம் இளம் குடும்ப பெண்கள் இருபதாயிரம் வரையான பிள்ளைகளை பெற்று தரவேண்டிய நிலையில் இன்று அது இல்லாது இருக்கின்றது. யுத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களிற்கு அப்பால் இன்று யுத்ததின் பின்னரான பாதிப்புக்களாக இன்றும் தொடர்கின்றது. இன்னும் இருவது வருடங்களின் பின்னர் இருக்கப்போகும் கிளிநொச்சி மாவட்டம், பிள்ளைகளின் கல்வி, துறைசார்ந்த கல்வி அறிவு, பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை் தொடர்பில் இன்றே அவதானம் செலுத்த வேண்டி உள்ளது. இது தொடர்பில் மக்களை விழிப்படைய செய்ய வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.


ஒரு சமூகத்தின் குடித்தொகையின் வளர்ச்சியும். இருப்பும் அந்த சமூகத்தின் பாதுகாப்பையும் வளர்ச்சியையும் தருகின்றது. இவ்வாறான நிலையை அனவரும் உணர்ந்த செயற்பட வேண்டும். மக்களிற்கு இது தொடர்பான வழிப்புணர்வுகளை வழங்குவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இவ்வாறான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டத்தை முன்மொழிந்த கரைச்சி பிரதேச சபையின்  பெண்கள் விவகார குழுவினருக்கும், அவற்றை ஒருமித்து ஏகமனதான தீர்மானத்தை நிறைவேற்றிய அனைத்து ஊறுப்பினர்களிற்கும் நான் நன்றி கூறுகின்றேன். அடுத்த வருடம் குறித்த திட்டத்தின் அடுத்த படியாக நான்கு பிள்ளையும் அதற்கு மேல் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களை இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு எமது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More