இலங்கையில்தொடர்ந்து எரியும் கப்பல் எண்ணெய் கசிவு ஆரம்பமா

அம்பாறை சங்கமன்கந்தை கடலில் தீப்பற்றி எரிந்து வரும் எம்டி டி நியூ டயமண்ட் எரிபொருள் டேங்கரின் தீயை அணைக்க இலங்கை கடற்படை தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையினரும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடற்படை செய்தித் தொடர்பாளர் கப்டன் இந்திகா டி சில்வா கூறுகையில், கப்பலின் என்ஜின் அறையில் ஏற்பட்ட தீ எண்ணெய் சேமிக்கப்பட்ட பகுதிக்கு பரவவில்லை. எண்ணெய் சேமிப்பு பகுதிக்கு தீ பரவாமல் தடுக்க மேலும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மூன்று கடற்படைக் கப்பல்கள், இரண்டு வேக படகுகள், இரண்டு இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் மூன்று கப்பல்கள் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கப்பலின் உட்புறத்தில் தீ பரவினால் எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயங்கள் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் நேற்று (03) இருந்த இடத்திலிருந்து 12 மைல் தொலைவில் கரையை நோக்கி நகர்ந்துள்ளது.

ஆசிரியர்