நிலப் பிரச்சனை காரணமாக சகோதரியை கத்தியால் குத்திய சகோதரன்!

பதுளையில் தனது சகோதரியை குத்திய சந்தேகத்தின் பேரில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 61 வயதான தமன்வரவில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவரது 57 வயதுடைய சகோதரியே கத்திக்குத்துக்கு இலக்காகி உள்ளார்.

குறித்த பெண் நடத்தும் கடைக்கு சந்தேகநபர் வந்து குத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இருவருக்கும் இடையே சில காலமாக நிலப்பிரச்சனை நிலவுவதாகவும், மரம் வெட்டப்பட்ட சம்பவம் இதற்கு காரணமாக இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதில் காயமடைந்த பெண் பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர்