நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்யுமாறு உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை கைது செய்யுமாறு காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குணுவெல இன்று பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

வழக்கொன்றில் சாட்சியமளிப்பதற்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்ற காரணத்தால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி இளைஞர்களிடம் பண மோசடி செய்ய முயற்சித்தமை சம்பந்தமாக சந்தேகநபர் ஒருவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில், மனுஷ நாணயக்காரவே முதலாவது சாட்சியாளராக முறைப்பாட்டாளர் தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சாட்சியமளிப்பதற்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால், நீதவான் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளார். அத்துடன் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

ஆசிரியர்