ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் அடுத்த வருடமே நியமிக்கப்படுவார் என அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி நியமிக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் சட்டத்துறை செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் சஜித் பிரேமதாஸ கட்சியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து,  கட்சியின் புதிய பிரதி தலைவரை செயற்குழு உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிஸ்ஸங்க நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து, கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக தற்போது பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு புதிய தலைவரை தெரிவு செய்வதற்காக பல தடவைகள் செயற்குழு உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்தனர்.

எனினும் இதுவரையில் தீர்மானமிக்க முடிவொன்று அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஆசிரியர்